மாம்பழம் குழந்தைகளும், பெண்களும் விரும்பி சாப்பிடும் பழமாகும். பார்த்த உடனே சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றும். மக்கள் மாம்பழத்தை அப்படியே சாப்பிடுகின்றன , தோலை எடுத்துவிட்டு சாப்பிடுகின்றன, சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிளகாய் சர்க்கரை சேர்த்தும் சாப்பிடுகின்றன. மாம்பழத்தின் சாறையும் உட்கொள்கின்றன. உலகிலேயே மக்கள் கூடுதலாக உண்ணும் பழம் இது.
முக்கனிகளில் முதலான மாம்பழத்திற்கு பேர்போனது சேலம். பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, செந்தூரா ஆகியவை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சேலத்தில் சாகுபடி செய்யப்படும் மாம்பழத்தின் மனமும், சுவையும் மாறாமல் மற்றும் தனிப்பட்டு இருப்பதால் வருடா வருடம் அதன் விற்பனை அதிகரிக்கிறது, மேலும் தனி மதிப்பு உள்ளது.இதன் சுவையும் மனமும் தனி தன்மை கொண்டதால் மக்கள் இதற்கு அடிமையாகி உள்ளன. சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 10.000 ஏக்கர் அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. வெளிநாட்டு விற்பனையில் சிங்கப்பூர்,மலேஷியா, தாய்லாந்து, போன்ற நாடுகளில் சேலம் மாம்பழம் அதிகம் வீரப்பனை ஆகிறது. கடுமையான வறட்சி , கோடை வெயிலின் உக்கிரம் இவை எல்லாம் மாம்பழத்திற்கு சுவையும் இனிப்பும் அதிகரிக்கும் அம்சங்கள். தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மாம்பழத்தை பரிசளிப்பது சேலம் மக்களின் பண்பாடாகும்.