பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 April, 2021 6:30 PM IST
Credit : Dinakaran

வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி (Salt production) மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மழைக்காலம் முடிந்தவுடன், கடந்த பிப்ரவரி மாதம் உப்பு பாத்திகள் சரி செய்யப்பட்டு, உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது .

உப்பு உற்பத்தி

கடந்த 15 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் உப்பு உற்பத்திப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக, உப்புத் தொழிலாளர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது உழைத்து வருகின்றனர். வெயிலை சமாளிக்க, அதிகாலையிலேயே தங்கள் வேலையைத் தொடங்கி விடுகிறார்கள்.

தொழிலாளர்கள் மகிழ்ச்சி

உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு டன் உப்பு தற்போது ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் 10 மணி வரை ஈடுபடுகின்றனர். ஒரே நேரத்தில் அதிக அளவு உற்பத்தி நடைபெறுவதால் ஆள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இருந்த பொழுதிலும் வேலை தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.73½ லட்சத்துக்கு எள் ஏலம்

சிறுசேமிப்பு திட்டங்களின் முக்கியத்துவத்தை அறியச் வேண்டி தருணம் இது!

English Summary: Salt production intensifies in Vedaranyam! Workers happy with daily work
Published on: 12 April 2021, 06:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now