நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 January, 2024 5:36 PM IST
Samridh Kisan Uttsav

MFOI 2024 விருது நிகழ்வின் ஒரு பகுதியாக ஹரியானா மாநிலம் குர்ஹாரம் பகுதியிலுள்ள ஷிகாப்பூர் KVK- ல் சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வு வருகிற ஜனவரி 9 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. மஹிந்திரா, ஹுண்டாய் போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்களிப்புடன் வேளாண் கண்காட்சி அரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதுமுள்ள விவசாயிகளை சிறப்பிக்கும் நிகழ்வாக சமீபத்தில் வெற்றிக்கரமாக நடைப்பெற்று முடிந்த, MFOI 2023 விருது நிகழ்வினைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டிற்கான நிகழ்வுக்கு (MFOI Awards 2024) பரிந்துரை, மற்றும் விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படும் சூழ்நிலையில் ஹரியானவில் சம்ரித் கிஷான் உட்சாவ் (samridh kisan uttsav) நிகழ்வு நடைப்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக்கொள்ள உள்ள நிலையில், வேளாண் துறை சார்ந்து செயல்படும் முன்னணி நிறுவனங்களும் தங்களது தயாரிப்பு மற்றும் பொருட்களை காட்சிப்படுத்த உள்ளன. நிகழ்வின் முக்கிய பகுதியாக “ராபி பயிர்களில் நோய் மற்றும் பூச்சி மேலாண்மை குறித்தும், டிராக்டர் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், டிராக்டர் பராமரிப்பு மற்றும் தினை விவசாயம்” தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு நடைப்பெற உள்ளது. இந்த நிகழ்வில் வேளாண் ஆலோசகர்கள், வேளாண் விஞ்ஞானிகள் பலரும் பங்கேற்பதால்- விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள நிகழ்வாக ”சம்ரித் கிஷான் உட்சாவ்” திகழும் என கருதப்படுகிறது.

MFOI விருதுகள் 2024:

வேளாண்துறை சார்ந்து கடந்த 26 ஆண்டுகளாக ஊடகவியல் துறையில் இயங்கி வரும் கிரிஷி ஜாக்ரான் மற்றும் அக்ரிகல்ச்சர் வேல்ர்ட் இணைந்து வேளாண் துறையில் அதிதீவிரமாக செயல்படுவதோடு நல்ல வருமானம் ஈட்டும் முன்னோடி விவசாயிகளை கௌரவிக்கும் நோக்கத்தோடு MFOI (millionaire farmer of India) விருது வழங்கும் நிகழ்வினை ஏற்பாடு செய்து இருந்தனர்.

விவசாயிகளை கௌரவிக்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வின் முதன்மை ஸ்பான்சராக மஹிந்திரா டிராக்டர்ஸ் இணைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயிகளிடமிருந்து விருதுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அதில் தேர்வான விவசாயிகளுக்கு விருது வழங்கும் நிகழ்வு டெல்லியில் உள்ள பூசா மைதானத்தில் டிசம்பர் 6,7,8 நடைப்பெற்றது.

Read more: அரிசி உமிக்கு அதிகரிக்கும் மவுசு- காரணங்களை அடுக்கும் வேளாண் ஆலோசகர்

இந்த விருது நிகழ்வோடு வேளாண் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியா முழுவதுமிருந்து விவசாயிகள் விருதுக்கு விண்ணப்பித்த நிலையில் மாவட்டம், மாநிலம், தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட்டது.

2023- நிகழ்வின் வெற்றியினைத் தொடர்ந்து, Millionaire Farmer of India Awards 2024- நிகழ்வுக்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வில் ஏறத்தாழ 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MFOI விருதுகள் 2024- நிகழ்வானது, டிசம்பர் 1 முதல் டிசம்பர் 5, 2024 வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிகழ்வினைப் போன்றே இந்தியாவின் அனைத்து மூலைகளிலிருந்தும் விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில் முறை வல்லுனர்கள் பலரும் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

samridh kisan uttsav நிகழ்வில் ஸ்டால் அமைக்க கீழ்காணும் லிங்கினை பூர்த்தி செய்யவும்!

samridh kisan uttsav

Read more: கனமழை முதல் மிக கனமழை- தமிழகத்துக்கு தொடர் எச்சரிக்கை விடுத்த IMD

English Summary: Samridh Kisan Uttsav will planned on jan 9 at haryana shikohpur KVK
Published on: 06 January 2024, 05:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now