எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள 48 உதவி மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த இரண்டு வருடங்களாக வேலை வாய்ப்பு என்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை தற்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பணிகள் தேர்வாணையமான SSC பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5000 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. நடப்பாண்டு இப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
மற்ற துறைகளை தொடர்ந்து வங்கிளிலும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கியில் 48 உதவி மேலாளர் காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருத்தல் வேண்டும். மேலும் CISCO CCNA Security, PCCSA, JNCIA_SEC, JNCIS-SEC, CCSA, Fortinet NSE1, Fortinet NSE2, Fortinet NSE 3 இதில் ஏதேனும் ஒரு சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
Ukraine Crises: தமிழகத்தைச் சேர்ந்த 5,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கி தவிப்பு
விண்ணப்பிக்க:
மேற்கண்ட பணியிடத்திற்கு https://sbi.co.in/web/careers/current-openings என்ற இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: 750 ரூபாய்
சம்பள விவரம் (Salary Details):
மேலும் SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆன்லைன் மூலமாக எழுத்து தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடதக்கது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் நடைபெறும். தேர்தெடுக்கப்படுவர்களுக்கு மாதம் 36,000 முதல் 63,840 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மார்ச் மாதம் 5ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு:PDF பார்வையிடவும்.
மேலும் படிக்க:
EPFO குட் நியூஸ்: இனி இந்த முக்கிய வசதியால், உறுப்பினர்களுக்கு பெரிய நிவாரணம்
தமிழகம்: ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு...