எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரின் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என இந்த மாநில அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அந்தப் பிரிவினரிடையே உற்காசத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய சமூகத்தினருக்கு, கல்வி, வேலை, சமூக கவுரவம், உள்ளிட்டவைக் கிடைத்தால் மட்டுமே முன்னேற முடியும். அப்போது தான் நாடு முழுமையான வளர்ச்சி பெறும்.
மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபுஜெகஜீவன்ராம் பிறந்த நாளையொட்டி அவரது பெயரிலான விருது வழங்கும் விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இவ்விழாவில் அவர் பேசியதாவது:-
கர்நாடகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகங்களின் மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்ள அரசு மானியமாக ஒருவருக்கு ரூ.1.75 லட்சம் வழங்குகிறது.
இந்த மானியம் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும். சுயதொழில் செய்யும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு உதவி செய்ய வசதியாக ஒவ்வொரு தாலுகாவிலும் பாபுஜெகஜீவன்ராம் சுயதொழில் திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்த திட்டத்தை வடிவமைத்து ஒரு மாதத்தில் செயல்படுத்தப்படும்.
குடீர திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு 75 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் இதற்கான அரசாணை பிறப்பிக்கப்படும். அரசு விடுதிகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
புதிதாக தொழில் தொடங்கும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களின் நலனுக்காக நில சீர்திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
மேலும் படிக்க...
கோடை வெப்பத்தைத் தகிக்க வைக்கும் தயிர்- எந்த நேரத்தில் சாப்பிடலாம்?
புற்றுநோய், சுகர் என பல நோய்க்குத் தீர்வு வேண்டுமா? இந்த ஒரு இலையே போதும்!