கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, மழலையர் மற்றும் நர்சரிப் பள்ளிகள் நவம்பர் 1ம் தேதி திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அமலில் ஊரடங்கு (Curfew in effect)
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடியத் தளர்வு ஆகியவைக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனாத் தொற்றுக் குறைந்து வருவதால் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
திறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக பள்ளிகளைத் தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திறப்பு இல்லை
அதேநேரத்தில், தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது எனவும் தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோரின் வேண்டுகோளைப் பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் முடிவு
மேலும் மழலையர் எல்.கே.ஜி யூகேஜிக்கு பள்ளிகளை திறப்பு பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என அரசானை வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் (LKG, UKG), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம். காப்பாளர், சமையலர் உள்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
சீனாவில் மீண்டும் கொரோனா- அச்சத்தில் உலக நாடுகள்!
Ayog warns! கொரோனா மீண்டும் வேகமாகப் பரவக் கூடும்- நிதி அயோக் எச்சரிக்கை!