சென்னை, மதுரை,கும்பகோணம், கோவை,நெல்லை, விழுப்புரம் உள்பட 8 போக்குவரத்து மண்டலங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதில் 6 போக்குவரத்து கலகங்களிலுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டது.
தற்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் நிரப்பப்பட உள்ள ஓட்டுநர், நடத்துனர் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது
அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 டிசிசி (ஓட்டுநர் - நடத்துநர்) பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டது.
இன்று (ஆக.18) பிற்பகல் 1 மணிமுதல் செப்.18-ம் தேதி பிற்பகல் 1மணி வரை www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் அரசுவிரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் டிசிசி (ஓட்டுநர் - நடத்துநர்) பதவிக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களை அறிந்துகொள்ள www.arasubus.tn.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடவும்.
இப்பதவிக்கான நியமனம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் இருக்கும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்யப்படும்.
தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன்தேர்வு (செய்முறை) மற்றும் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
மகளிர் உரிமை தொகை புதிய அதிரடி அப்டேட்!
சிம் கார்டு வாங்கும் விதியில் புதிய மாற்றம்- ஒன்றிய அமைச்சர்