தமிழகத்தில் உள்ள அனைத்துக்கல்லூரித் தேர்வுகளும் இந்த முறை ஆன்லைனில் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். இந்தத் தேர்வுகள் பிப்ரவரி 1ம் தேதிமுதல் 20ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு (Corona vulnerability)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் மூடப்பட்டிருந்தப் பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டன. முதலில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், பிறகு 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டன.
அதேநேரத்தில், 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஆயத்தப் பணிகளையும் பள்ளிக் கல்வித்துறை முடுக்கிவிட்டது.
ஒமிக்ரான் (Omicron)
இதனிடையே, கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா, ஒமிக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பள்ளிகளைப் பொறுத்தவரை பொதுத் தேர்வைக் கருத்தில் கொண்டு, 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டன.
செமஸ்டர் தேர்வு (Semester Exam)
மற்ற வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்று பரவல் அதிகமாக உள்ளதால், மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கலை மற்றும் பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக் மற்றும தனியார் கல்லூரிகளுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த பருவத்திற்கான தேர்வுகள் (Semester Exams) எப்போது நடத்தப்படுமோ?என்ற கேள்வி எழுந்தது.
ஆன்லைனில் (Online exams)
இந்நிலையில் பொறியியல், பாலிடெக்னிக், அரசு மற்றும் தனியார் கலைக் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு பிப்.,1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைனில் நடக்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
குறுபடிகள் தடுக்கப்படும் (Minorities will be prevented)
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு பிப்.,1 முதல் 20ம் தேதி வரை ஆன்லைன் முறையில் நடக்கும்.
கோவிட் பரவலை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தவறுகள் நடக்காத வகையிலும் குளறுபடி இல்லாமலும் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். அரசின் இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க...