விவசாயத்திற்கு பேருதவி புரியும் மாடுகளுக்கு என்றுமே தனிச்சிறப்பு உண்டு. அதிலும் நாட்டு மாடுகளுக்கு, வரவேற்பு அதிகம். நாட்டு மாடுகளின் வரிசையில், காங்கேயம் இன மாடுகள் (Kangayam cows) விற்பனை பழையகோட்டை மாட்டுத்தாவணியில் நடந்தது. இதில் ரூபாய் 12 இலட்சத்துக்கு மாடுகள் விற்பனையானது
காங்கேயம் இன மாடுகள்:
காங்கயம் தாலுகா, நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான வாரச் சந்தை நேற்று நடைபெற்றது. காங்கயம் அடுத்துள்ள நத்தக்காடையூர் அருகே பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகள் ரூ.12 லட்சத்திற்கு விற்பனையானது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு (Sales) அனுமதிக்கப்படும்.
58 கால்நடைகள் விற்பனை:
நேற்று 58 கால்நடைகள் (Livestock) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 72 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.40 வரை விற்பனையானது, காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ45 ஆயிரம் வரை விற்க்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 38 கால்நடைகள் ரூ.12 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் (Market Supervisors) தெரிவித்தனர்.
மாடு வியாபாரிகள் மகிழ்ச்சி:
தீபாவளி பண்டிகை நேரத்தில், காங்கேயம் இன மாடுகள் விற்பனை நல்ல விதமாக நிகழ்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மாடு வியாபாரிகளும், வாங்கியவர்களும் தெரிவித்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தஞ்சையில், வேளாண் படிப்புக்கான இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழகம்!
விவசாய நிலங்களில் மலட்டுத்தன்மையைத் தடுப்பதற்கான தமிழரின் ஆராய்ச்சி! சீனா நிதியுதவி!