தமிழகத்தில் மூன்றாம் பாலினத்தவருக்கென தனி மருத்துவ மையம் தொடங்க பட்டுள்ளது. ராஜீவ்காந்தி பன்னோக்கு மருத்துவமனையில் அமைந்துள்ள இம்மையத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
தமிழக அரசு மூன்றாம் பாலினத்தவரின் நலனுக்காக பல்வேறு நல திட்டங்களை செயல் படுத்தி வருகிறது.அதன் தொடர்ச்சியாக தற்போது தனி மருத்துவ மையத்தினை அமைத்துள்ளது. ரூ 15 லட்சம் செலவில், நவீன வசதிகளுடன் கூடிய இந்த மையம் எல்லா நாட்களும் செயல் படும்.
மூன்றாம் பாலினத்தவரும் மற்றவர்கள் போல தங்களது நோய் மற்றும் உடல் உபாதைகளை தயக்கமின்றி மருத்துவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும், என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர்களுக்கு தேவையான பாலின மாற்று அறுவை சிகிக்சை உட்பட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிகிக்சை அளிக்க பட உள்ளது என்றார் .
பிரத்யேக மருத்துவ குழு
இம்மையத்தில் பிரத்யேக மருத்துவ குழுக்கள் அமைத்துள்ளன.அவையாவன
- ஒட்டுறுப்பு அறுவை சிகிக்சை
- நாளமில்லா சுரப்பியில் மருத்துவர்
- பால்வினை நோய் மருத்துவர்
- மனநல மருத்துவர்
இந்த சிறப்பு சிகிக்சை மருத்துவர்களை அணுக விரும்புவோர் வெள்ளி கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, அறை எண் 108 இல் சந்திக்கலாம்.
கட்டணம் ஏதுமின்றி தரமான சிகிக்சைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் ரூ 1 கோடி மதிப்பிலான பாலின மற்றும் தொடர் சிகிச்சைக்கு தேவை படும் நவீன மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டு வெகு விரைவில் மேம்படுத்த உள்ளது என தெரிவித்தார்.
Anitha Jegadeesan