ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் எள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 222 எள் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
எள் ஏலம் (Sesame Auction)
ஏலத்தில் கருப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 89 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 124 ரூபாய் 42 காசுக்கும், சராசரி விலையாக 115 ரூபாய் 49 காசுக்கும் விலை போனது. அதேபோல, சிவப்பு ரகம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 88 ரூபாய் 99 காசுக்கும், அதிகபட்ச விலையாக 139 ரூபாய் 99 காசுக்கும், சராசரி விலையாக 133 ரூபாய் 99 காசுக்கு ஏலம் போனது.
மொத்தம் 16,459 கிலோ எடையுள்ள எள் 19 லட்சத்து 89 ஆயிரத்து 272 ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல, சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிவகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 1853 நிலக்கடலை மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ நிலக்கடலை குறைந்தபட்ச விலையாக 60 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 73 ரூபாய் 30 காசுக்கும், சராசரி விலையாக 69 ரூபாய் 40 காசுக்கும் ஏலம் போனது
மொத்தம் 58,935 கிலோ எடையுள்ள நிலக்கடலை 39 லட்சத்து 88 ஆயிரத்து 524 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல, கடந்த வாரம் மொத்தம் 1636 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 63 ரூபாய் 29 காசுக்கும், அதிகபட்ச விலையாக 72 ரூபாய் 30 காசுக்கும், சராசரி விலையாக 68 ரூபாய் 69 காசுக்கும் ஏலம் விடப்பட்டது.
மேலும் படிக்க
PM Kisan: விவசாயிகளை எச்சரிக்கும் மத்திய அரசு!
மாடித்தோட்டத்திற்கு ஏற்ற செடி முருங்கை: முன்னோடி விவசாயியின் அறிவுரை!