"விவசாயி என்ற வார்த்தையைக் கேட்கும் போதெல்லாம் நமது கற்பனைகளில் தோன்றுவது ஆண் விவசாயிகள் மட்டுமே. ஆனால் கள நிலவரம் அப்படியானதாக இல்லை. வேளாண் துறையில் பெண்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் என்றாலே வீட்டின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே முடங்கி இருப்பார்கள் என்ற பேச்சு எல்லாம் காலம் கடந்த ஒன்று தான்" என கிரிஷி ஜாக்ரன் இயக்குனர் ஷைனி டொம்னிக் தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பெண்களின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச்-8 ஆம் தேதி மகளிர் தினம் உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு (2024) கடைப்பிடிக்கப்பட உள்ள மகளிர் தினத்திற்கான கருப்பொருள் ”Inspire Inclusion” என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பொருள் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்த இயலும் என்பதாகும். சிறந்த சமுதாயத்தை உருவாக்க, பெண்களின் மதிப்பை அனைவரும் புரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஷைனி டொம்னிக், மகளிர் தினத்தை முன்னிட்டு வேளாண் துறையில் பெண்களின் பங்கு குறித்து தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு-
உலகளவில் வேளாண் பணியில் பெண்களின் பங்கு:
இந்தியாவில் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் பெண்களின் பங்கினைப் பற்றி குறிப்பிட வேண்டும் என்றால், இந்தியாவின் கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்பு தொடர்பான வேலைகளில் 70 சதவீதம் பெண்களால் செய்யப்படுகிறது. பயிர் உற்பத்தியில் பெண்களின் பங்களிப்பும் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்ப்பது தொடர்பான நடவடிக்கைகளில் பெண்களின் பங்களிப்பு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.
இது தவிர, பயிர்களை அறுவடை செய்த பின் செய்யப்படும் பெரும்பாலான வேலைகளான விதை தேர்வு, விதைகளை சுத்தம் செய்தல், நெல் நடவு செய்தல், வயல்களில் களையெடுத்தல், பயிர்களை அறுவடை செய்தல் மற்றும் கதிரடித்தல் போன்ற பெரும்பாலான பணிகளை பெண்கள் மட்டுமே செய்கிறார்கள். இதேபோல், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் கூற்றுப்படி, உலகளாவிய விவசாய தொழிலாளர் சக்தியில் பெண்களின் பங்கு 42 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
புள்ளிவிவரங்களின்படி விவசாயத்தில் ஆண்களை விட பெண்கள் அதி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நமது நாட்டில் இன்றளவும் பல மாநிலங்களில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் விவசாயப் பணிகளைக் கையாண்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளும் அனைத்து திட்டங்களிலும் குறிப்பாக மானியத் திட்டங்களிலும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து வருவது அனைவரும் அறிந்ததே.
கிரிஷி ஜாக்ரனில் பெண்களுக்கு முக்கியத்துவம்:
வேளாண் பணி மட்டுமின்றி, இதர பணிகளிலும் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்ற சாதகமான பணிச்சூழலை உருவாக்க வேண்டிய கடமை அனைவரிடத்திலும் உள்ளது. அந்த வகையில் நமது கிரிஷி ஜாக்ரன் நிறுவனத்திலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். கிரிஷி ஜாக்ரனில் ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்களே அதிகளவில் பணிப்புரிந்து வருகின்றனர். அதிலும், பலர் துறை ரீதியான தலைமை பொறுப்பினை அலங்கரித்து வருகின்றனர்.
MFOI- நிகழ்வில் பெண் விவசாயிகளுக்கு அங்கீகாரம்:
நம் நாட்டில் பல பெண் விவசாயிகள் விவசாயத் துறையில் ஈடுபடுவதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளனர். அவர்கள் மற்றவர்களுக்கு உத்வேகம் அளிப்பதோடு முன்மாதிரியாகவும் திகழ்கின்றனர். அந்த வகையில், சமீபத்தில் மஹிந்திரா டிராக்டர் பங்களிப்போடு கிரிஷி ஜாக்ரன் முன்னெடுப்பில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற “millionaire farmer of india awards “ நிகழ்வில் பெண்களுக்கான Richest farmer of India (RFOI) பிரிவில் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தின் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுக்காவினைச் சேர்ந்த ஏ.வி.ரத்னம்மாவுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
Read more: ஒவ்வொரு முள்ளங்கியும் 15 கிலோவா? ஆச்சரியத்தை தரும் விவசாயி
ஏ.வி.ரத்னம்மாவுக்கு மொத்தம் 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அதில் மா மற்றும் தினை பயிரிட்டுள்ளார். பட்டுப்புழு வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். வேளாண் பணிகளுடன் உணவு பதப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ரத்னம்மா ஆண்டுக்கு ரூ.1.18 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார். வேளாண் துறையில் ஏ.வி.ரத்னம்மாவின் பங்களிப்பை சிறப்பிக்கும் விதமாக MFOI நிகழ்வில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில் நடைப்பெற்ற அமர்வில் விருது வழங்கி கௌரவித்தது நமது கிரிஷி ஜாக்ரன்.
MFOI 2023 நிகழ்ச்சியின் மகத்தான வெற்றியினைத் தொடர்ந்து, நடப்பாண்டு டிசம்பர் மாதம் 1 முதல் 5 ஆம் தேதி வரை தலைநகர் டெல்லியில் MFOI 2024 விருது நிகழ்வினை நடத்த ஏற்பாடு நடைப்பெற்று வருகிறது. 100-க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ள நிலையில் தகுதியான விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரை வரவேற்கப்படுகிறது. உங்கள் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால், MFOI விருதுத் தொடர்பான அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்திற்கு சென்று தங்களது விவரங்களை பதிவு செய்யுங்கள். நீங்களும் கோடீஸ்வர கிசான் கும்பத்தின் ஒரு பகுதியாக மாறுங்கள் என சைனி டொம்னிக் தெரிவித்துள்ளார்.
Read more:
சோலாப்பூரில் MFOI சம்ரித் கிஷான் உட்சாவ் நிகழ்வு- மில்லினியர் விவசாயிகள் கௌரவிப்பு
StartupTN- TNAU புதிய மன்றம் தொடக்கம்: வேளாண் பணிகளுக்காக மயாபோட்ஸ்-எக்ஸ் 1 ரோபோட்!