News

Friday, 04 June 2021 08:08 PM , by: R. Balakrishnan

Credit : Dinamani

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள், ஊரடங்கு மற்றும் தடுப்பூசிகளால் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக கொரோனா நோயாளியைத் (Corona Patients) தாக்கும் தோல் பூஞ்சை கர்நாடகத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருப்புப் பூஞ்சை

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் சிலர், கருப்புப் பூஞ்சை (மியூகோர்மைகோசிஸ்) நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்னேற்பாடு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து எடுத்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில், சித்ரதுர்கா மாவட்டம் சிக்கலாபுரா கிராமத்தைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவருக்கு, கொரோனாத் தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொற்றிலிருந்து குணமடைந்த அவருக்கு, காது பகுதியில் பூஞ்சை நோய் உருவாகி இருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், தோல் பூஞ்சை நோய் (Skin Fungus Disease) பாதிப்பு இருப்பது உறுதியானது.

தோல் பூஞ்சை

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் சிலர் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தோல் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தோல் பூஞ்சை நோயை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும், இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது அல்ல என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கண்ணைத் தாக்கி வந்த கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் குறைவதற்குள், காதுக்கு வந்துள்ள பூஞ்சை நோய் பாதிப்பு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

கொரோனா நோயாளிகளுக்கு வாட்ஸ்அப் மூலம் இலவச ஆலோசனை வழங்கும் மருத்துவர்கள்!

கொரோனா தடுப்பூசியால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு! ஆய்வில் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)