இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கிடைக்க வேண்டிய போனஸ் மற்றும் இதர சலுகைகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த வாடிக்கையாளர் நிறுவனங்கள் தங்களது செலவை குறைத்து வருகின்றன.
ஐடி நிறுவனங்கள் (IT Companies)
இந்தியாவின் ஐடி நிறுவனங்கள் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு சேவை வழங்குகின்றன. இதற்காக அந்நிறுவனங்களிடம் இருந்து டாலர், யூரோ போன்ற கரன்சிகளில் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வருவாய் கிடைக்கிறது. எனினும், உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் உருவாகியுள்ளதால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள் தங்களது செலவுகளை குறைக்க முடிவு செய்துள்ளன. இதனால் ஐடி நிறுவனங்களின் வருவாய் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை சமாளிப்பதற்காக, முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்கான போனஸ் தொகையை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் ஊழியர்களுக்கான variable pay தொகை குறைக்கப்படும் என தெரிவித்துள்ளன.
பொருளாதார மந்தநிலையை சந்திப்பதற்காக அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்கள் செலவுகளை குறைத்து வருவது மட்டுமல்லாமல், ஊழியர்களையும் நீக்கி வருகின்றன. எனவே, வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
இலவசங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!
மன அழுத்தத்தில் இந்தியப் பணியாளர்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!