நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழகத்தின் சிலப் பகுதிகளில் 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்குத் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தேர்தல் நடைபெறும் இடங்களில் இந்தத் தட்டுப்பாடு தலைதூக்கியிருப்பதால், மக்கள் சற்று விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும், 19 ல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த, 28 ல் தொடங்கியது. வரும் 19 ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், வேலுார் மாவட்டத்தில், 500, 200 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.பல இடங்களில் இந்த நோட்டுக்களைக் காணவில்லை.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சித் தலைமையும் வெளியிட்டு வருகின்றது. இதனால் வேட்பாளர்கள் உறுதியான நிலையில், ஒரு சில நாளில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.
பலர் இப்போதே வீடு, வீடாகச் சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். எம்.எல்.ஏ., எம்.பி., தேர்தலில் 2,000 ரூபாய் நோட்டுக்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
இந்த முறை நடப்பது மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சிகளுக்கான தேர்தல் தான். இதனால் 1,000 முதல் 500 ரூபாய் வரை கொடுத்து ஓட்டு சேகரிக்கின்றனர். இதற்கு 500, 200 ரூபாய் நோட்டுக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
பிரச்சாரம் செய்யும் நாட்கள் குறைவாக உள்ளதால், இப்போதே இதற்கான பணத்தை தயார் செய்து கவர்களின் போடும் பணிகள் பல இடங்களில் நடந்து வருகிறது. வங்கிகள், டாஸ்மாக் கடை, மொத்த வியாபாரிகளிடம் 2,000 ரூபாய் நோட்டுக்கள் கொடுத்து, 500, 200 ரூபாய் வாங்கி செல்லும் பணிகளில் வேட்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பலர் முடிந்த வரை வங்கி ஏ.டி.எம்., களில் 500, 200 ரூபாய் நோட்டுக்களை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலை ராணிப்பேட்டை உட்படப் பல மாவட்டங்களிலும் உள்ளது. பலர் 2,000 ரூபாய் கொடுத்து டிக்கட் கேட்பதாக நடத்துனர்கள் கூறுகின்றனர். தேர்தல் முடிவும் வரை இது போன்ற நிலைமை நீடிக்கும் என வங்கியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...