இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 9 May, 2022 7:17 PM IST
Showerma

கேரளாவில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மே 1 ஆம் தேதி ஷவர்மா சாப்பிட்ட 58 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர், ஒரு சிறுமி உயிரிழந்ததையடுத்து, அமைச்சர் மா. சுப்பிமரணியன் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

ஷவர்மா இந்திய உணவு இல்லை என்றும் அதை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி இயக்கத்தை மேற்பார்வையிடும் போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன், மற்ற உணவுப் பொருட்கள் உள்ளன, மேலும் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி இயக்கத்தை மேற்பார்வையிட்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன், செய்தியாளர்களிடம் பேசுகையில், நிறைய உணவுப் பொருட்கள் உள்ளன. மேலும் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

“ஷவர்மா மேற்கத்திய உணவு. மேற்கத்திய நாடுகளின் தட்பவெப்ப நிலையில் கெடாமல் இருக்கும். அந்த பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்கு கீழே செல்லும். இறைச்சிப் பொருட்களாக இருந்தாலும், வெளியில் வைத்தாலும் கெட்டுப் போகாது. ஆனால், இங்கே அவை ஃப்ரீசரில் சரியான நிலையில் பராமரிக்கப்படாவிட்டால், அவை கெட்டுவிடும். அந்த கெட்டுப்போன பொருட்களை சாப்பிடுவதால் கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்” என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஷவர்மாவை மேற்கத்திய உணவு என்று கூறினாலும், ஷவர்மா ஒரு பிரபலமான மத்திய கிழக்கு தெரு உணவு என்பது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் உள்ள ஷவர்மா கடைகளில் சரியாக பாரமரித்து வைப்பதற்கான வசதிகள் இல்லை என்றும், அவற்றை தூசி படியும் வகையில் வெளியில் வைத்திருப்பதாகவும், இளைஞர்களின் ஆர்வத்தால், பல கடைகளில் முறையான வசதிகள் ஏதுமின்றி விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாகவும் மா. சுப்பிரமணியன் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “இந்த உணவு நமது தட்பவெப்ப நிலைக்கு பொருந்துமா என்று யாரும் யோசிப்பதில்லை. இந்த பொருட்களை விற்பனை செய்பவர்களும் இந்த பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதற்கான ஏற்பாடு உள்ளதா என்று கவலைப்படுவதில்லை. அவர்கள் வணிக நோக்கில் மட்டுமே சிந்திக்கிறார்கள். இரண்டு, மூன்று புகார்கள் வந்ததையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள இந்தக் கடைகளை ஆய்வு செய்ய உணவுப் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளோம். தேவையான வசதிகள் இல்லாத 1,000 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இந்த ஆய்வை தொடர்ந்து மேற்கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்க உள்ளோம்” என்று கூறினார்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் மே 1 ஆம் தேதி ஷவர்மா சாப்பிட்ட 58 பேர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டது, ஒரு சிறுமி உயிரிழந்ததையடுத்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்துக்கள் வந்துள்ளன. உணவகத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட ‘ஷவர்மா’ மாதிரிகளில் நோய்க்கிருமி சால்மோனெல்லா மற்றும் ஷிகெல்லா வைரஸ் கண்டறியப்பட்டதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க

ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள கூடாது -அன்பில் மகேஷ் எச்சரிக்கை

English Summary: Showerma should not eat, this is not our food - Ma Subramanian
Published on: 09 May 2022, 07:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now