News

Wednesday, 09 December 2020 02:14 PM , by: Daisy Rose Mary

வடகிழக்கு பருவ காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வடகிழக்கு பருவ காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அடுத்த 48 (டிசம்பர் 10) மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்

முழுமையாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

சமையல் சிலிண்டருக்கு மாற்றாக மாட்டுச்சாணத்தில் இருந்து Biogas - ரூ.12 ஆயிரம் மானியத்துடன்!

மழை அளவு

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினம் (தூத்துக்குடி) 7செ.மீ, பெரியநாயக்கன் பாளையம் (கோவை), கோத்தகிரி (நீலகிரி ), வட்டணம் (ராமநாதபுரம்), குன்னூர் தலா 5செ.மீ, திருச்செந்தூர், சோலையார் (கோவை), காரியாபட்டி (விருதுநகர்), சோழிங்கநல்லூர் (சென்னை) தலா 4செ.மீ, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), உதகமண்டலம், தேக்கடி (தேனி), சூளகிரி (கிருஷ்ணகிரி), ஆத்தூர் (சேலம்), ஹிந்துஸ்தான் பல்கலை (செங்கல்பட்டு), வாலாஜா (ராணிப்பேட்டை), காஞ்சிபுரம், ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்) தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

மழை பொழிவு 9% அதிகம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 9 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. அக்., 1 முதல் இன்று வரை 43.1 செ.மீ மழை பெய்துள்ளது. இயல்பான மழையின் அளவு 39.6 செ.மீ ஆகும்.

வாடிக்கையார்களுக்கு சமையல் சிலிண்டர் மானியம் தொடருமா?அதிகாரிகள் விளக்கம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)