ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் என்றாலே தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களாக தான் பெரும்பாலும் இருக்கும். சிறுதானிய உணவு வகைகளுக்காக 'ட்ரூகுட்' என்ற ஸ்டார்ட்அப் தொடங்கப்பட்டு இன்று அது வெற்றிகரமாக இயங்கி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களை போல 5 ரூபாய்க்கு அசத்தலான பேக்கிங்கில் இவர்கள் சிறுதானிய நொறுக்கு தீனிகளை வழங்குகின்றனர். மத்திய அரசு 2023-ஐ சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக அறிவித்துள்ளது. வேளாண் துறை அமைச்சகத்தின் தகவல் படி 1.45 கோடி டன்னாக இருந்த சிறுதானிய உற்பத்தி, 2020-21ல் 1.8 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
சிறுதானியங்கள் (Small Grains)
உலகளவில் அரிசி மற்றும் கோதுமை கோடிக்கணக்கான மக்களால் உட்கொள்ளப்படுகிறது. ஆனால் அரிசி, கோதுமையை விட சிறுதானியங்களில் தான் ஊட்டச்சத்துக்கள் நிறைய இருக்கின்றன. கிராமங்களில் மட்டும் தினசரி உணவில் இடம்பெற்று வந்த கம்பு, கேழ்வரகு, திணை போன்ற சிறுதானியங்கள் கோவிட் பாதிப்பிற்கு பின்னர் நகரப் பகுதி மக்களாலும் அதிகம் வாங்கப்படுகிறது. இந்நிலையில் 2019ல் சிறுதானிய ஸ்நாக் பொருட்களுக்கான ஸ்டார்ட்அப் நிறுவனமாக ட்ரூகுட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
எப்படி உருளை சீவல்கள், மசாலா நொறுக்குத் தீனிப் பொருட்கள் 10 ரூபாய் பாக்கெட்டுகளில் காற்று அடைக்கப்பட்டு கவர்ச்சிக்கரமான பேக்கிங்கில் வருகிறதோ, அப்படி தான் இவர்கள் சத்து மிகுந்த சிறுதானிய நொறுக்குத்தீனிகளை பேக்கிங் செய்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். அப்போது தினசரி ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனையான நிலையில், இன்று 20 லட்சம் பாக்கெட்டுகள் தினசரி விற்கின்றது. மலிவு விலை, சுவை மற்றும் சத்து ஆகியவற்றில் கவனம் செலுத்தி இவற்றை தயாரிக்கின்றனர்.
ஸ்டார்ட்அப் (Startup)
தனது சிறுதானியம் சார்ந்த ஸ்டார்ட்அப் முயற்சி குறித்து ட்ரூகுட் நிறுவனர் ராஜு பூபதி கூறியதாவது: 5 ரூபாய்க்கு கிடைக்கும் பாக்கெட் நொறுக்குத் தீனிகள் பெரும்பாலும் எண்ணெய் தின்பண்டங்களாக உள்ளன. அவற்றில் எந்த சத்தும் கிடையாது. மாறாக உடலுக்கு தீங்கு தான் உண்டாக்கும். அதுவே சிறுதானியங்களில் க்ளூடன் இருக்காது. குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இதனால் ரத்த சர்க்கரை அளவு உயராது.
புரதம், கால்சியம், மக்னீசியம் பைபர் போன்றவை இருப்பதால் இவற்றை சாப்பிட்டால் அடுத்த சில மணி நேரங்களுக்கு பசி உணர்வு இருக்காது. ஆந்திராவில் உள்ள அரசு பள்ளிகளில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு காலை நேர ஸ்நாக்காக ட்ரூகுட்டின் எள்ளு கேக், வேர்கடலை கேக், திணை கேக் போன்றவை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 10 கோடி குழந்தைகளுக்கு இதனை கொண்டு செல்வோம் என நம்புகிறோம்.
சிறுதானியங்கள் வெயில், மழையை தாங்கி வளரக்கூடியது. சிறுதானியங்களுக்கு பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் அதிகம் தேவையில்லை. நெல் மற்றும் மக்காச்சோளம் போன்றவையின் ஒரு கிலோ சாகுபடிக்கு 4 ஆயிரம் லிட்டர் நீர் செலவிடப்படுகிறது. அதேசமயம் சிறுதானியங்களில் அவற்றில் நான்கில் ஒரு பங்கு நீரினை கொண்டு சாகுபடி செய்யலாம்.
நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு முறையை பார்த்தால், சிறுதானியங்கள் அவர்களின் தினசரி உணவில் 20-35% பங்கை எடுத்துக் கொள்கின்றன. மெதுவாக அது அதிகரித்து வருகிறது. இதனால் ஸ்நாக் தொழிலின் முக்கிய அங்கமாக சிறுதானியங்கள் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தின்பண்டங்களில் 15 - 20% பங்கை சிறுதானிய வகைகள் பிடித்திருக்கும்.
நாங்கள் மாதத்திற்கு 700 முதல் 1,000 டன்கள் வரை சிறுதானிய உணவுகளை பிராசஸ் செய்கிறோம். அடுத்த 3 ஆண்டுகளில் புரதம், கால்சியம், மக்னீசியம் பைபர் போன்றவை இருப்பதால் இவற்றை சாப்பிட்டால் அடுத்த சில மணி நேரங்களுக்கு பசி உணர்வு இருக்காது. ஆந்திராவில் உள்ள அரசு பள்ளிகளில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு காலை நேர ஸ்நாக்காக ட்ரூகுட்டின் எள்ளு கேக், வேர்கடலை கேக், திணை கேக் போன்றவை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 10 கோடி குழந்தைகளுக்கு இதனை கொண்டு செல்வோம் என நம்புகிறோம்.
சிறுதானியங்கள் வெயில், மழையை தாங்கி வளரக்கூடியது. சிறுதானியங்களுக்கு பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் அதிகம் தேவையில்லை. நெல் மற்றும் மக்காச்சோளம் போன்றவையின் ஒரு கிலோ சாகுபடிக்கு 4 ஆயிரம் லிட்டர் நீர் செலவிடப்படுகிறது. அதேசமயம் சிறுதானியங்களில் அவற்றில் நான்கில் ஒரு பங்கு நீரினை கொண்டு சாகுபடி செய்யலாம்.
மேலும் படிக்க
நிலக்கடலை ஏலத்தில் நல்ல இலாபம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
அடுத்த ஆண்டும் பொங்கல் பரிசு நிச்சயம்: தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!