கொரோனா பரவல் காரணமாக வெங்காய மண்டிகள் இயங்காது என வியாபாரிகள் அறிவித்துள்ள நிலையில் சின்ன வெங்காயம் 7 உழவர் சந்தைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று திருச்சி மாவட்ட வேளாண் துணை இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.
உழவர் சந்தைகள் மூலம் விற்பனை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக திருச்சியில் மே 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெங்காய மண்டிகள் இயங்காது என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்காக திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் 7 உழவர் சந்தைகளிலும் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த சின்ன வெங்காயத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் தாங்கள் விவசாயி என்பதற்கான சான்றிதழை பதிவு செய்து இந்த உழவர் சந்தைகளில் சின்ன வெங்காயம் விற்பனை செய்யலாம்.
மேலும் விவசாயிகள் தாங்கள் பயிர் செய்த காய்கறிகள் மற்றும் பழ வகைகளையும் சந்தைப்படுத்த முடியாமல் இருந்தால் இந்த உழவர் சந்தைகளில் விற்பனை செய்து வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளலாம்.
வேளாண் அதிகாரி உதவி எண்கள்
திருச்சி கே.கே.நகர் உழவர் சந்தையில் விற்பனை செய்ய உதவி வேளாண்மை அதிகாரி வேல்முருகனை 99524 68355 என்ற செல்போன் எண்ணிலும், அண்ணா நகர் வேளாண்மை உதவி அலுவலர் சுவாமிநாதனை 97513 44331, திருவெறும்பூர் வேளாண்மை உதவி அதிகாரி எபிநேசரை 90476 98130, லால்குடி உதவி வேளாண்மை அதிகாரி சிவசக்தியை 99651 37998, முசிறி வேளாண்மை அதிகாரி நடராஜனை 95247 63232, துறையூர் வேளாண்மை அதிகாரி குணாவை 80989 77028, மணப்பாறை வேளாண்மை உதவி அதிகாரி மூர்த்தியை 96989 17155 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு விவசாயிகள் பதிவு செய்து கொண்டு விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க.....
வேளாண் சார்ந்த ஆலோசனைகளை வீட்டில் இருந்து தொலைபேசி மூலம் பெறலாம் - வேளாண் துறை தகவல்!!
கொரோனா தொற்றால் விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை களைந்திட நடவடிக்கை - தமிழக அரசு!!
வேளாண் பணிகளை தடையின்றி மேற்கொள்ள நடவடிக்கை: விவசாயிகளுக்கான தொலைபேசி எண்கள் அறிவிப்பு!!