பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 22 May, 2019 6:32 PM IST

இயற்கையான முறையில் விவசாயம் செய்து விற்பனை செய்யும் குறு விவாசகிகளுக்கு  மத்திய அரசின் உணவு பாதுகாப்பு அமைப்பின் (FSSAI) சான்றிதழ்கள் இல்லாமல் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருவாய் 12 லட்சம் மற்றும் அதற்கு குறைவான வருவாய் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் வருவார்கள். இந்த விலக்கு வரும் ஏப்ரல் 2020வரை மட்டுமே. மேலும் மத்திய அரசன் 'ஜெய்விக்  பாரத் லோகோ' இல் இருந்தும் தற்போது விலக்கு கொடுக்க பட்டுள்ளது.

அடிப்படையில் 'ஜெய்விக்  பாரத் லோகோ' என்பது  இயற்கையான முறையில் வேளாண்மை செய்து விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசால் வழங்க படும் முத்திரை ஆகும்.

50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் உள்ளவர்களுக்கும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலக்கானது விவசாக்கிகளுக்கு மட்டுமே. நிறுவனங்களுக்கு இவ்விலக்கு பொறுத்தது.

2017 ஆண்டு சட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை பொருட்களை நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்பவர்கள் அரசன் இந்த சான்றிதழ்கள் (NPOP, PGS) கட்டாயம்  வைத்திருக்க விடும்.

உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாடு அமைப்பானது பல்வேறு ஆய்வுகள் மற்றும் களபணிகளை மேற்கொண்டது. இதில் இயற்கை வேளாண்மை செய்யும் குறு விவசாகிகள் எதிர் கொள்ளும் சிக்கல்கள் போன்றவற்றை  கருத்தில் கொண்டு தற்போது இவர்களுக்கு விலக்கு அளித்துள்ளது.

நம் நாட்டில் பெரும்பாலான இயற்கை வேளாண்மை விவசாகிகள் மற்றும் இயற்கை வேளாண்மை பொருட்களை விற்பனை செய்பவர்கள் (NPOP (National Programme for Organic Production) & PGS (Participatory Guarantee System)) இவ்விரு அமைப்பிலும் பதிவு செய்யாது இருக்கின்றனர்.எனவே அரசு பதிவு செய்யாதவர்களை ஏதேனும் ஒரு அமைப்பில் பதிவு செய்யும் படி அறிவுறுத்தி வருகிறது.  இதிலுள்ள விதி முறைகளை மேலும் எளிமையாக்க முயற்சி எடுத்து வருகிறது.

FSSAI கூறுகையில் சிறு மற்றும் குறு இயற்கை வேளாண் விவசாகிகள்,  விற்பனையாளர்கள் தங்களது விற்பனை பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மாநில அரசுகள் உணவு பாதுகாப்பினை உறுதி செய்தல் அவசியமாகும் என அறிவுறுத்த பட்டுள்ளது.

Anitha Jegadeesan

English Summary: Small Organic Growers Can Sell Without Certification Till April, 2020 :Food regulator Allowed (FSSAI)
Published on: 22 May 2019, 06:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now