ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, '1967' மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
ரேஷன் பொருட்கள் (Ration Items)
சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று குடிமை பொருள் வழங்கல்குற்ற புலனாய்வு துறை செயல்பாடு குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டுறவு மற்றும் உணவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், உணவு வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன், சேமிப்பு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனர் சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: ரேஷன் கடைகளில் பயனாளிகள் மட்டுமே, அரிசி வாங்குவதை உறுதி செய்ய வேண்டும். அரிசி வாங்கி, தாங்கள் பயன்படுத்தாமல் வெளியில் விற்பவர் யார் என்பதை, கடை வாரியாக கண்டறிந்து, எச்சரிக்க வேண்டும். பொது விநியோக திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒத்துழைத்தால் தான் அரிசி கடத்தலை அறவே தடுக்க முடியும்.
தகவல் தெரிவிக்க
ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக, '1967' மற்றும் 1800 425 5901 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாக, தகவல்கள் தெரிவிக்கலாம்.
மேலும் படிக்க
பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்: அமைச்சரின் சூப்பரான அறிவிப்பு!
1000 ரூபாய் போதும்: கல்லூரி மாணவர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்!