ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிக்க 90-க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் மீன் பிடித்து இன்று அதிகாலை பாம்பன் துறைமுகத்திற்கு திரும்பி வந்தனர்.
இதையடுத்து, துறைமுகத்தில் குவியல் குவியலாக சூரை மீன்கள் பெட்டியில் வைத்து அடுக்கி வரத்து அதிகமாக வந்ததாக கூறினர். இருப்பினும் குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுவதாக அவர்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
சூரை மீன்களானது கிலோ 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில் தற்போது, கிலோவுக்கு 30 முதல் 40 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது. தற்போது இந்தவகை மீன்களின் சீசன் ஆகும், நவம்பர் மாதம் வரை டன் கணக்கில் சூரை மீன்கள் கிடைக்கக்கூடும்.
மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், தேனி, சிவகங்கை, ஈரோடு வரையிலும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலம் கொச்சிக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து விமானங்கள் மற்றும் கப்பல்கள் மூலமாக அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் உணவு பாறையில் ஒட்டிருக்கும் பாசிகளே.
மருத்துவ குணங்கள்:
ஒமேகா-3 ஊட்டச்சத்து நிறைந்து. அதிக புரதசத்துக்களையும், குறைந்த கொழுப்பு சத்துக்களையும் கொண்டுள்ளன.
குழந்தைகளுக்கான சிறந்த உணவு இந்த மீன் என்கின்றனர். ஏனென்றால், ஹைப்பர் ஆக்டிவிட்டி குறைபாட்டையும், நடத்தை குறைபாடுகளையும் சரிசெய்யும் DHA என்கிற வேதிப்பொருள் அதிகளவில் உள்ளது. மேலும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது.
பெரியவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கிறது, குறைந்த ரத்த அழுத்த பிரச்னையை போக்கி, சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது. மலச்சிக்கல், ஜீரண பிரச்னைகள் தவிர்க்கிறது. சருமத்தை முதுமை காலத்தில் சுருங்குதலில் இருந்து பாதுகாக்கிறது. தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவுகிறது.
மேலும் படிக்க:
Post Office: 10 வயது குழந்தைகளுக்கு சேமிப்பு திட்டம், மாதம் ரூ.2,500 கிடைக்கும்