மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 July, 2019 11:49 AM IST

இந்திய ரயில்வே துறை பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தெற்கு ரயில்வேயினை பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்காக  சென்னை சென்ட் ரல், எழும்பூர் உட்பட 19 ரயில் நிலையங்களை தேர்வு செய்யதுள்ளது.

இவ்வாண்டில் பெரும்பாலான ரயில் நிலையங்களை பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக (Eco Smart Station) தரம் உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளன. இந்தியாவில் அதிகப்படியான மக்கள் போக்குவரத்திற்காக ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் அனைத்து நிலையங்களையும்  திறன் மிகு ரயிவே நிலையங்களாக தரம் உயர்த்தும் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

தெற்கு ரயில்வேயின் கீழ் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை திறன் மிகு ரயில்வே நிலையங்களாக தரம் உயர்த்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது.  சென்னை சென்ட்ரல், மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் சில பசுமை திட்டங்களை அறிமுக படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த ரெயில் நிலையங்களை  பசுமை திறன்மிகு ரயில் நிலையங்களாக தரம் உயர்த்துவதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன.

சென்னை கோட்டத்தில் மட்டும் 19 ரயில் நிலையங்களை தேர்வு செய்யதுள்ளது. இதில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, மாம்பலம், கிண்டி, பழவந்தாங்கல், தாம்பரம், காட்பாடி, திருத்தணி, திருவள்ளூர், செங்கல்பட்டு போன்ற ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த மேம்பாட்டு திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்க பட்டுள்ள ரயில் நிலையங்களில் நீரை சேமிப்பதற்காகவும், சுற்று சூழலை பாதுகாக்கவும்,  குடிநீர் மறுசுழற்சி, கழிவுநீர் மேலாண்மை மையம், மழைநீர் சேமிப்பு, எல்இடி விளக்குகள் பொருத்துதல், மின்சார சேமிப்பு, பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பது, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற உள்ளது என தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறினர்.

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Sothern Indian Railway Going To Implement Eco Smart Stations: National Green Tribunal (NGT) Part Of This Project
Published on: 29 July 2019, 11:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now