தமிழகத்தைச் சேர்ந்த 50 லட்சம் பேரின் ஆதார் தொடர்பான தகவல்கள், இணையதளத்தில் ஹேக்கர்கள் மூலம் திருடப்பட்டுள்ளதாக டெக்னிசாம் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
செல்போன் மூலம் திருட்டு (Theft by cell phone)
தமிழகம் முழுவதும் 2 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைகள் உள்ளன. இந்த ரேஷன் அட்டைதாரர்களில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் மற்றும் செல்போன் எண்கள் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தகவல்கள் திருட்டு (Information theft)
பொது வினியோக திட்ட இணைய தளத்தில் இருந்து ஹேக்கர்கள் மூலம் இந்த தகவல்கள் கசிந்துள்ளதாக டெக்னிசாம் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹேக்கிங் (Hacking)
கடந்த மாதம் 28-ந்தேதி இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்து இருப்பதாகவும், அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஹேக்கிங் மூலம் மொத்தம் 49 லட்சத்து 19 ஆயிரத்து 668 பேரின் ஆதார் விவரங்களும், செல்போன் எண்களும் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.
என்னென்னத் தகவல்கள் (What information)
தனிநபரை அடையாளம் காணக்கூடிய தகவல்கள் மற்றும் ஆதார் எண், பயனாளிகளின் விவரங்கள், அவர்கள் உறவினர்களின் விவரங்கள் என அனைத்து தகவல்களும் தரவு தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக டெக்னிசாம் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
எச்சரிக்கை (Warning)
தமிழகத்தில் பொது வினியோக திட்டத்தில் தரவுகள் ஹேக் செய்யப்பட்டதன் மூலம் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
மக்கள் அதிர்ச்சி (People are shocked)
இந்த நிறுவனத்தின் எச்சரிக்கை ஆதார் அட்டைதாரர்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க...
தக்காளி சாகுபடியில் பயிர் பாதுகாப்பு - தோட்டக்கலை துறை ஆலோசனை!!