தமிழகம் கடும் வறட்சியினை தற்போது சந்தித்து வருகிறது. பெரும்பாலான நீர் நிலைகள் தண்ணீர் இன்றி கவலைக்கு இடமாக இருந்து வருகிறது. நிலத்தடி நீர் வற்றி விட்டதால் விவசாய நிலங்கள் வான் நோக்கி காத்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பாலான விவசாகிகள் மழையினை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள்.இம்முறை கோடை மழையும் சரிவர கைகொடுக்காததால் விவசாகிகள் அனைவரும் தென்மேற்கு பருவ மழையினை எதிர்பார்த்து உள்ளனர்.
தென்மேற்கு பருவமழை ஆண்டு தோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை பொழியும். இம்மழையினால் டெல்டா மாவட்ட விவசாகிகள் மட்டுமின்றி அனைத்து மாவட்ட விவசாகிகளுக்கும் பயன் பெறுவார்கள்.
தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பயிர் மேலாண்மை துறை, காலநிலை ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை மற்றும் அனைத்து மாவட்டங்களில் பெய்ய விருக்கும் மழையின் அளவு குறித்து வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் கூறினார்.
நடப்பாண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பினை ஆஸ்திரேலிய நாட்டின் ‘மழை மனிதன்'என்ற கணினியின் துணை கொண்டு பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதி மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென்மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை பயன்படுத்தி நடப்பாண்டுக்கான பருவமழை கணக்கிட பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பு 2019