அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவ மழை இன்று தொடங்குகிறது. ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் என எதிர் பார்க்க பட்ட நிலையில் சற்று தாமதமாக இன்று தொடங்க உள்ளது. எனினும் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் தென்கிழக்கு பருவ காற்று வலுவடைத்துள்ளது. தெற்கு பகுதியில் வளி மண்டலா கிழடுக்கு காற்றானது கிழக்கு மேற்காக வீசுகிறது. இதன் காரணமாக மேற்கு கடற்கரையை ஒட்டி உள்ள பகுதிகளான கேரளா மற்றும் எல்லையோர மாநிலங்களில் கன மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கேரளாவில் இன்று முதல் திங்கள் வரை (ஜூன் 8, 9, 10) ஆகிய தேதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென் மாவட்டங்களான ஆலப்புழா மற்றும் கொல்லம் ஆகிய பகுதிகளில் கன மழை வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் பெய்த கன மழையால் கேரளாவில் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளானது. இம்முறையும் கன மழைக்கு வாய்ப்புள்ளதால் கேரளா அரசும், தேசிய இடர் மீட்ப்பு குழுவும் தயாராகி வருகிறது. தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, போன்ற இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டியுள்ள இடங்களில் மழை பெய்ய கூடும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அனல் காற்று மெல்ல குறையும்.அடுத்த 24 மணி நேரத்தில் தென்தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
Anitha Jegadeesan
Krishi Jagran