News

Wednesday, 17 June 2020 11:47 AM , by: Daisy Rose Mary

மத்தியப்பிரதேசத்தின் மேற்கு, மத்தியப்பிரதேசத்தின் கிழக்கு மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய வனிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு பருவமழை மேற்கு மத்தியப்பிரதேசத்தின் இன்னும் சில பகுதிகளிலும், கிழக்கு மத்தியப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் இன்னும் சில பகுதிகளிலும் முன்னேறியுள்ளது.

பருவமழையின் வரம்பு காண்ட்லா, அகமதாபாத், இந்தூர், ரைசன், கஜுராஹோ, ஃபதேபூர் மற்றும் பஹ்ரைச் வழியாக செல்கிறது.

சூறாவளி ஏற்பட வாய்ப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு மற்றும் சுற்றுப்புறங்களில் ஒரு சூறாவளி சுழற்சி ஏற்பட வாய்ப்பு உள்ளது. இது சராசரியாகக் கடல் மட்டத்தில் இருந்து 3.6 கி.மீ வரை பரவியுள்ளது. வடமேற்கு ராஜஸ்தானிலிருந்து கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் மீது தெற்கு ஹரியானா மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசம் முழுவதும் சூறாவளி சுழற்சி வரை ஒரு தொட்டி பகுதியாக செல்கிறது. இதன் நிலை கடல் மட்டத்தில் இருந்து 0.9 கி.மீ வரை நீண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் கொங்கன், கோவா மற்றும் மத்திய மகாராஷ்டிராவின் சில பகுதிகளின் ஒரு சில இடங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கிழக்கு இந்தியாவில் மழை

மேலும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளில் ஜூன் 17 முதல் 19 வரை மழையின் தாக்கம் தீவிரம் அடையும் என்றும், அடுத்த 5 நாட்களில் துணை இமயமலையில் மேற்கு வங்கம் மற்றும் சிக்கிம் பகுதிகளில் கனமழை முதல் அதிக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது

மேலும் அஸ்ஸாம், மேகாலயா , திரிபுரா மற்றும் மிசோரம் பகுதிகளில் அடுத்த 5 நாட்களில் பரவலான மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு அசாம் மற்றும் மேகாலயாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமான மற்றும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க 
மானியத்தில் நீர் பாசன உபகரணங்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு!
குறுவை சாகுபடிக்காகக் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
தென்மேற்கு பருவமழை தீவிரம் கொப்பரை உற்பத்தி களங்கள் இடமாற்றம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)