இந்தியாவில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தான், தென் மாநிலங்கள் மட்டுமின்றி வடமாநிலங்களிலும் அதிக மழை பெய்யும், வழக்கமாக மே மாத இறுதயிலோ அல்லது ஜூன் மாத முதல் வாரத்திலோ தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்புகள் அதிகம் என எதிர்பார்க்கப்படுவது வழக்கமாகும்.
அந்தமான் தீவுகளில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி தென்படும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், இதனை சரிவர கணித்து தென்மேற்கு பருவமழை தொடங்குவதை அறிவிக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கமாகும் என்பது குறிப்பிடதக்கது. ஆனால், இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரிகின்றன.
இதையடுத்து வருகிற 27ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. தற்போது சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 27ந் தேதிக்கு பதில் 23ந் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
TNPSC: குரூப்- 2 தேர்வு மையம் மாற்றம் - ஆட்சியர் அவசர அறிவிப்பு!
தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டால், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளிலும் வெள்ளம் ஏற்பாட வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடதக்கது.
வரும் நாட்களில் நீர் வீழ்ச்சி போன்ற சுற்றாலத் தளங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன, எனவே வானிலை நிலவரம் அறிந்து, மக்கள் சுற்றாலத் தளங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
State Bank: 2வது முறையாக உயர்ந்த வட்டி விகிதம்! விவரம் உள்ளே!