News

Thursday, 13 June 2019 11:22 AM

தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவ மழையின் காரணமாகவும், வெப்பசலன காரணமாகவும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இன்னும் ஓரிரு தினங்களில் வெப்பத்தின் தாக்கம் குறையும் என வானிலை ஆராய்சசி மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த சனிகிழமை கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான முத்ல்  கனமான மழை பெய்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரை  தொடர்ந்து நல்ல மழை பெய்தது வருவதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் ஒன்றரை அடி உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேனி, கோவை, நீலகிரி போன்ற மாவட்டங்களில் கனமழை தொடர்ந்து கன மழை பெய்யது வருகிறது. 

வட  மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், கரூர், திருச்சி ஆகிய பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக அனல் காற்று வீச கூடும் என்று வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் சில  குறிப்பிட்ட இடங்களில் 30-40 கி.மீ காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Anitha Jegadeesan

Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)