தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கியது, அதை தொடர்ந்து தமிழகத்தின் கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த சில தினங்களாக பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்காலில், லேசான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
இன்றும் நாளையும் கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் கோவா, மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும்
-
ஜூன் 17ம் தேதி வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 - 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
-
இன்று 16 முதல் ஜூன் 20 வரை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50-60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
-
அதே போல் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40- 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
-
இன்று மற்றும் ஜூன் 19 ஆகிய தேதிகளில் மத்தியமேற்கு அரபிக்கடலில் பலத்த காற்று மணிக்கு 40 -50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும்
-
இதனால் இந்த நாட்களில் மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
-
மேலும் குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை 3.0 முதல் 3.5 மீட்டர் வரை ஒரு சில நேரங்களில் எழும்ப கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது
மழை பொழிவு
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தேவாலா, கூடலுர் பஜார், சின்னக்கல்லார், வால்பாறை, சோலையார், சின்கோனா, புளிப்பட்டி ஆகிய பகுதிகளில் தலா 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.
மேலும் படிக்க...
Lockdown : வீட்டில் இருப்பவர்களா நீங்கள்? அப்போ இந்த தகவல் உங்களுக்கு தான்!
கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!
PAN card வைத்திருப்பவர்கள் இதனை உடனே செய்யுங்கள், இல்லையெனில் ரூ.10,000 அபராதம்!