News

Friday, 10 June 2022 12:49 PM , by: R. Balakrishnan

Ration Card

ஜூன் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம், சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும்.

சிறப்பு முகாம் (Special Camp)

சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ஜூன் 11-ம் தேதி முதல் ரேஷன் கார்டு சிறப்பு முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு முகாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சிறப்பு முகாமில் புதிய குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் சேவை நடைபெறும். நியாயவிலை கடைகளில் பொருள் பெற வருகை தர இயலாத மூத்த குடிமக்களுக்கு அங்கீகாரம் சான்று வழங்கப்படும்.

மேலும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளும் பணியும் நடைபெறும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

எனவே, சிறப்பு முகாமை பயன்படுத்தி பொதுமக்கள் ஜூன் 11ஆம் தேதியை நினைவில் வைத்துக்கொண்டு தங்கள் குடும்ப அட்டையில் திருத்த மேற்கொள்ள விரும்புவோர் செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் படிக்க

பொறியியல் படிப்பிற்கு ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!

கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன்: விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)