மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை ஊக்குவிப்பதற்கான நாடு தழுவிய பிரச்சாரத்தை இந்திய அரசின் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாழ்நாள் சான்றிதழ் (Life Certificate)
ஆண்ட்ராய்டு போன் வாயிலாக முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் முறை 2021ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. முக அங்கீகார தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், டிஜிட்டல் வழியாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பதை ஊக்குவிக்கவும் தேசிய அளவில் சிறப்பு பிரச்சாரம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்/ முக அங்கீகார தொழில்நுட்ப முறையை ஊக்குவிப்பதற்காக ஓய்வூதியதாரர்களுக்கு வசதியாக சிறப்பு முகாம்களை நடத்துமாறு பதிவு செய்யப்பட்ட அனைத்து ஓய்வூதியதாரர் சங்கங்கள், ஓய்வூதியம் விநியோகிக்கும் வங்கிகள், மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசு சுகாதார சேவை மையங்களுக்கு உத்தரவிடப்பட்டது.
சிறப்பு முகாம் (Special Camp)
மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையின் குழு நாளை (நவம்பர் 24) புதுச்சேரி செல்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியுடன் இணைந்து புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆடிட்டோரியத்தில் ஏற்பாடு செய்துள்ள பிராச்சாரக் கூட்டத்தில் அக்குழு கலந்து கொள்கிறது.
அனைத்து ஓய்வூதியதாரர்களும் இந்த மையத்துக்கு வருகை தந்து தங்களது டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்களை நேரில் வழங்குவதுடன், எதிர்காலத்தில் வீட்டில் இருந்தவாறே அதனை சமர்ப்பிக்கும் தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த முகாமில், இந்திய தனித்து அடையாள ஆணையத்தின் பிரதிநிதிகள், புதுச்சேரி ஜிப்மர் ஓய்வூதியதார்கள் சங்கத்தினர் கலந்து கொள்கின்றனர்.
2022 அக்டோபர் 1ஆம் தேதி முதல் இதுவரை டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ்கள் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 67,90,967 ஆகும். அதில், முக அங்கீகாரம் மூலம் தாக்கல் செய்தவர்கள் 3,64,958. இந்தக் கால கட்டத்தில் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் தாக்கல் செய்த மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் எண்ணிக்கை 24,12,102 ஆகும். இதில் முக அங்கீகாரம் மூலம் தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 2,11,769.
அனைத்து ஓய்வூதியதாரர்களும் இந்த மையத்துக்கு வருகை தந்து தங்களது டிஜிடல் ஆயுள் சான்றிதழ்களை நேரில் வழங்குமாறு மத்திய குழு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க
பென்சன் வாங்குவோர் சிலர் மட்டும் இதை செய்ய வேண்டாம்: ஏன் தெரியுமா?
EPFO வாடிக்கையாளர்களுக்கு விரைவில் 8.1% வட்டி: முக்கிய தகவல் வெளியீடு!