காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு கூடத்தினை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
இன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் வட்டத்தில் கோளிவாக்கம், உத்திரமேரூர் வட்டத்தில் ராவத்தநல்லூர், வாலாஜபாத் வட்டத்தில் பூசிவாக்கம், திருப்பெரும்பதூர் வட்டத்தில் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மணிமங்கலம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
மேற்கண்ட கிராமத்தில் வசித்துவரும் பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை/நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு/ மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்கள் மீது உடன் தீர்வு காணப்படும். மேலும், மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றூம் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டை பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கடந்த வியாழக்கிழமை (06.04.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., தலைமையில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்ட (PMAY(G) சிறப்பு முகாம் (Special Camp) நடைபெற்றது. இம்முகாமில் PMAY(G) திட்டத்தின் கீழ் SECC மற்றும் Awaas Plus-ல் வீடு கட்ட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பணி துவங்கப்படாத பயனாளிகள் மற்றும் அனுமதி வழங்கப்பட வேண்டிய பயனாளிகளுக்கு திட்டம் தொடர்பான விவரத்தினை சிறப்பு முகாம் (Special Camp) மூலம் பயனாளிகளுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு அளித்து பணியினை துரிதமாக ஆரம்பித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
மேலும், இதே போன்று உத்திரமேரூர் ஒன்றியத்தில் 11.04.2023 தேதியிலும், வாலாஜாபாத் ஒன்றியத்தில் 12.04.2023 தேதியிலும், திருப்பெரும்புதூர் ஒன்றியத்தில் 13.04.2023 தேதிகளிலும் சிறப்பு முகாம் (Special Camp) நடைபெற இருக்கின்றன. இதில் அனைத்து பயனாளிகளும் கலந்துக்கொள்ளும் வகையில், உதவி/ஒன்றியப் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்களும் கலந்துக்கொள்ளும் வகையில் உரிய அறிவுரை வழங்கி, சிறப்பு முகாம் (Special Camp) - இல் கலந்துக்கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சிறப்பு முகாமினை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காளான் வளர்ப்பு கூடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, அங்கு வளர்க்கப்படும் காளான் வளர்ப்பு முறையை குறித்து கேட்டறிந்தார்.
இம்முகாமில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ச.செல்வக்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) அர்பித்ஜெயின், இ.ஆ.ப., குன்றத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் சரஸ்வதி மனோகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
உடம்பை குறைக்கிறேனு உணவை தவிர்ப்பதா? இந்த 4 ஐட்டம் போதும் டயட்டுக்கு