சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 26 February, 2025 5:07 PM IST
Organic farming / pexels

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசநத்தம் கிராமத்தில் விவசாயிகளுக்கு  உயிர்ம வேளாண்மை உற்பத்தியாளர் ஆக  பயிற்சி நடைபெற்றது. இது வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் மற்றும் மாநில விரிவாக்கத் திட்டம் கீழ் நடைபெற்றது.

உயிர்ம வேளாண்மை (organic farming) என்பது செயற்கை உரம், செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகள், செயற்கை வளர்ச்சி ஊக்கிகள், உயிர் எதிரி கொண்ட எச்சங்கள் (கோழி மற்றும் கால்நடை), மரபணு மாற்றப்பட்ட உயிரினம் மற்றும் மனித சாக்கடைக் கழிவுகள் ஆகியவற்றை முற்றிலுமாகத் தவிர்த்து பயிர்சுழற்சி, பசுந்தாள் உரம், மக்கிய இயற்கை உரம், உயிரியல் (பூச்சி, நோய் மற்றும் களை) நிர்வாகம் போன்ற இயற்கை சாகுபடி முறைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வேளாண்மை (விவசாய) முறையாகும்.

பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:

இந்த நிலையில் இன்று நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள அரசநத்தம் கிராமத்தில் விவசாயிகளுக்கு  உயிர்ம வேளாண்மை உற்பத்தியாளர் ஆக  பயிற்சி நடைபெற்றது. இது வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் மற்றும் மாநில விரிவாக்கத் திட்டம் கீழ் நடைபெற்றது.

இதில் விதை சான்றளிப்பு மற்றும் கரிமச் சான்றிதழ் அளிக்கும் துறையை சார்ந்த  திருமதி .சித்திரைச்செல்வி மற்றும் ஈஷாவை சேர்ந்த  திரு .கதிர் , மோகனூர்  வேளாண் துறையில் உதவி வேளாண் இயக்குநர் திருமதி ஹேமலதா கலந்துகொண்டனர்.

இதில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் முறை பற்றியும் , அதன் முக்கியதுவம் , அதற்கான சான்றிதழ் வாங்கும் முறைகளை பற்றி விளக்கினார் . இப்பயிற்சியில் பிஜிபி வேளாண்மை கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

அவர்கள் இயற்கை வேளாண்மைக்கு பயன்படும் உரங்களின் முக்கியதுவம் பற்றியம் பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், மூலிகைப் பூச்சிவிரட்ட மற்றும் பல இயற்கை இடுபொருளின்  தயாரிப்பு முறைகள் பற்றி விவசாயிகளுக்கு  விளக்கினார் . இயற்கை வேளாண்மை  செய்யும் விவசாயிகள் சான்றிதழ் பெரும் முறை பற்றியும் வழிமுறைகள் குறித்தும் திருமதி .சித்திரைசெல்வி அவர்கள் விளக்கினார். மேலும் பி ஜி பி கல்லூரி மாணவிகள்  மு. கனிஷ்கா , ப.காவியா, எ.காவியா, மு .சு.காவ்ய பாரதி, ஜெ.கீர்த்தனா, ச. கீர்த்தனா, ந.கிருபா, பி .கிருத்திகா,வா .கிருத்திகா, கி. கிருஷ்ணவேணி ஆகியோர்  தங்களின் கருத்துகளை விவசாயிகளிடம் பகிர்த்துக்கொண்டனர்.

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வழிகளையும் நாட்டின் பசுமைப் பரப்பை அதிகரித்தல் , நதிகளை உயிர்ப்பித்தல், மண் வளத்தை மேம்படுத்தல் ஆகிய உயரிய நோக்கங்கள் குறித்து விழிப்புணர்வு மேற்கொண்டார். மேலும் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது.

மாவட்டந்தோறும் ஈஷாவின் களப்பணியாளர்கள் விவசாயிகளின் நிலத்திற்கு நேரடியாக சென்று மண்ணுக்கேற்ற மரங்கள், மரங்கள் மற்றும் ஊடுபயிர்கள் குறித்து ஆலோசனைகளை இலவசமாக  வழங்கி வருகிறார்கள்.  இயற்கை விவசாயத்திற்கு முதலீடும் செய்யாமல்  நிச்சயமான கூடுதல் வருமானத்தை விவசாயிகள் ஈட்ட வழிகாட்டினர்.

Read more: 

இயற்கை வேளாண்மை, மாடி தோட்டம் குறித்த பயிற்சி : வேளாண் பல்கலை அழைப்பு!

2025 மரக்கன்றுகள்: அனைத்திந்திய கலாம் கனவு அறக்கட்டளை சார்பில் முன்னெடுப்பு!

English Summary: Special training for organic agricultural producers
Published on: 26 February 2025, 05:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now