News

Monday, 23 November 2020 07:32 PM , by: KJ Staff

Credit : Maalai Malar

இளம் தகவல் தொழில்நுட்ப பொறியாளர்களின் கீரைக்கடை.காம், நுாறு வகை கீரைகளை காட்சிப்படுத்தியுள்ளது. உலகில் முதல்முறையாக மதுரை விவசாயக் கல்லூரியில் தொடங்கியுள்ளது. மதுரையில் எஸ்.எஸ்.காலனி மற்றும் கே.கே நகர் ஆகிய இரண்டு விற்பனை மையங்களைக் கொண்டு துவக்கப்பட்டுள்ளது. மதுரை வேளாண்மை கல்லுாரி (Madurai Agricultural College), சமுதாய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தொழில்நுட்ப வணிக பொரிப்பகம், வேளாண் வணிக பொரிப்பக சங்கம், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகம் ஆகிவையுடன் இணைந்து கீரைக்கடை.காம் (keeraikadai.com), தமிழ்நாட்டின் பாரம்பரிய, ஆரோக்கிய உணவு கண்காட்சி மற்றும் பசுமை உணவை முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது.

வேளாண் மற்றும் உணவு பதனிடுதல் நிபுணர் மற்றும் ஆவாரம் சூப்பர் புட்ஸ் நிறுவன இயக்குனர் டாக்டர் எம்.நாச்சிமுத்து முதலாவது பசுமை உணவை (கிரீனி மீல்ஸ்) துவக்கி வைத்தார்.

உடனடி உணவு வகை

கீரைக்கடை.காம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீராம் பிரசாத். ஜி கூறுகையில், ‘‘ உலகில் முதல் முறையாக உடனடி உணவு வகையாக ‘கிரீனி மீல்ஸ் (Greenie Meals) எனப்படும், பசுமை உணவை, அறிமுகம் செய்துள்ளோம். வாழைப்பூ கூட்டு, கீரைக் கூட்டு மற்றும் வாழைத்தண்டு கூட்டு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எங்களது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டத்தில், புதியதாக கண்டறியப்பட்ட கிரீனி மீல்ஸ், 250 கிராம், 85 ரூபாய். ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். தேவையான பொருட்களை உடனடியாக தயாரித்து, உடனே சமைத்து பேக்கிங் செய்கிறோம்.

Credit : Maalai Malar

இரசாயனம் இல்லா உணவு:

உணவை பாதுகாக்கும் எவ்வித பொருட்களோ, ரசாயனமோ சேர்க்கப்படவில்லை. நான்கு மடிப்புகளைக் கொண்ட பாக்கெட்டில், சூடாக்குதல் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி செய்துள்ளோம். உணவுப் பாதுகாப்பு விதிமுறைகள் (Food Safety Regulations) பின்பற்றி, சான்றிதழ் பெற்றுள்ளோம்.

காப்புரிமை

கிரீனி மீல்ஸ்க்கு முதன்முதலாக காப்புரிமையும் பெற்றுள்ளோம். உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் படி, கிரீனி மீல்ஸ், கிரீன் டிப் போன்றவைகளை ஆஸ்திரேலியா, இலங்கை, ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் (exports) செய்து வருகிறோம். கீரைக்கடை.காம் கோவை, மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 120-க்கும் மேற்பட்ட கீரை வகைகளை விற்பனை செய்து வருகிறோம். சமைக்கப்பட்ட கீரைகள் மதியமும், மாலையில் கீரை சூப் வகைகளையும் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2017 ல் துவக்கப்பட்ட இந்த நிறுவனம், டிசம்பர் 2017 ல் ஷோரூமை துவக்கியது. மார்ச் 2018 ல் உணவுகளை தயார் செய்தது. தற்போது, கிரீனி மீல்ஸ் துவக்கப்பட்டுள்ளது. இன்னும் பல உணவு வகைகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது என்றார் அவர்.

இடைத்தரகர் இல்லை:

120 வகையான கீரைகள் - எவ்வித இடைத்தரகர்களும் (intermediaries) இல்லாமல் நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. கீரை பறிக்கப்பட்ட நான்கு மணி நேரத்துக்குள் விற்பனையாகிறது. இயற்கை வேளாண்மை முறையில், 120 வகையான கீரைகள் விளைவிக்கப்படுகின்றன.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மலைவாழ் விவசாய மக்களுக்கு உதவும் பேராசிரியர் தமிழ்நாயகம்!

அதிக விட்டமின்களைக் கொண்ட தவசிக் கீரை! பயன்களை அறியலாம் வாங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)