இந்திய துணை ராணுவப்படையில் ஒன்றான எஸ்எஸ்பி (Sashastra Seema Bal) படையில், காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணிகள் நிரப்பப்படுகிறது. நாடு முழுவதும் இதற்க்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி விவரங்கள்
நிறுவனம்: Sashastra Seema Bal
பணியிடம்: நாடு முழுவதும்
அமைப்பு: மத்திய அரசு
காலி பணியிடங்கள்: 290, பொது (general) 225, எஸ்சி (SC)-43 ; எஸ்டி (ST)-42
வயது வரம்பு: 35. குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 7 ஜூன் 2019
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: ARC RTC, SSB, Gorakhpur
இந்த பணியில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://ssb.nic.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மேற்குறிப்பிட்ட முகவரிக்கு ஜூன் 7ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN