விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இதற்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.
14571 வேட்பாளர்கள் தங்கள் மனுக்களை இதுவரை திரும்ப பெற்று கொண்டனர். 2981 பதவியிடங்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 2 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கும், 21 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், வேட்புமனுக்கள் ஏதேனும் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. இறுதியாக 23998 பதவியிடங்களுக்கு 79433 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள்.
இதையடுத்து, அரசியல் கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கான தங்களது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மத்தியில் இன்று காலை பேசினர்.
அப்போது உரையாற்றிய அவர், திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை, தேர்தல் நேரத்தில் அளித்த அறிவிப்புகளும் நிறைவேற்றப்படவில்லை. விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்களை முதல்வர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாக பகிரங்கமாக சாடினார்.
தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றியது திமுக என்றும் முதியோர் உட்பட அனைவரையும் ஏமாற்றி, வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் காற்றில் பறக்க விட்டுவிட்டதாகவும் அப்போது அவர் சாடினார்.
பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டை பெற்றுத்தந்தது அதிமுக அரசு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார், மேலும் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற நகைக்கடன், மகளிர் சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்யாமல் திமுக ஏமாற்றுய் வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க:
ரேஷன் கார்டு இனி கட்டாயம் இல்லை! மக்கள் மகிழ்ச்சி!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்று பாரத்பந்த்- விவசாய சங்கங்கள் ஏற்பாடு!