தமிழகத்தில் 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்க முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ரொக்கத்தொகை அறிவிக்கப்படாதது தமிழக மக்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழகத்தில் இருக்கும் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 3ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பொங்கல் தொகுப்பில் கரும்பு, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, பச்சரிசி, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, போன்ற மளிகைப் பொருட்களும் அடங்கி இருக்கிறது.
முன்னதாக கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரொக்கப் பரிசு தொடர்பான அறிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பியிருந்த, பொது மக்களிடையே இது அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
மக்களின் இந்த குறையை போக்க ரூ. 5,000 ரொக்கம் வழங்கலாம் என்று முதல்வர் அரசு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் வர இருப்பதால், மிகப்பெரிய வெற்றியை அடைய உதவும் என்று நம்புகிறார்கள் ஆட்சியாளர்கள். எனவே அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 5,000 எவ்வாறு வழங்குவது என்று வட்டாரங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க