பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 October, 2021 11:40 AM IST
CM Stalin wrote Letter To Central

மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் மூலம் வலியுறுத்தியதால் தமிழ்நாட்டுக்கு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் நடவு மற்றும் நேரடி விதைப்புக்கு அடியுரமாக டிஏபி(DAP), உரம் தேவை. இந்த உரத்துக்கு தற்போது தட்டுப்பாடு உள்ளது. டிஏபி உரத்துக்கான மூலப்பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுக்கான கூடுதல் மானியத் தொகையை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளாததால் உர நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியைக் குறைத்துள்ளன. இறக்குமதியும் குறைந்துள்ளதால் உரத்துக்கு தட்டுப்பாடு உள்ளது.

தமிழ்நாடு உட்பட இன்னும் பல மாநிலங்களிலும் இதே நிலை நீடித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தை பொருத்தவரை, தர வேண்டிய நிலுவை உரத்தை ஒன்றிய அரசு வழங்காமல் கால தாமதம் செய்துள்ளது. இந்த நிலையில் நிலுவை உரத்தை வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

அந்தக் கடிதத்தை ஒன்றிய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் எல்.மாண்டவியாவை நேரில் சந்தித்து திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார்.

“தமிழகத்தில் சம்பா சாகுபடி விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு தேவையான டிஏபி(DAP) மற்றும் உரத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று ஒன்றிய அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒன்றிய அரசு தரப்பில் இருந்து நிலுவையில் இருக்கும் 1.59 லட்சம் மெட்ரிக் டன் யூரியா மற்றும் உரங்களை வழங்க வேண்டும், மேலும் கூடுதலாக 25ஆயிரம் மெட்ரிக் டன் டிஏபியும்(DAP), 10 ஆயிரம் மெட்ரிக் டன் எம்ஓபி (MOP) உரங்களையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

இதுபோன்ற நிலையில்,  ஒன்றிய அரசு 90 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை தமிழ்நாட்டுக்கு ஒதுக்கியுள்ளது. ஸ்டாலின் எழுதிய கடிதத்தால் இந்த ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதன் போதிலும் 1.59 லட்சம் மெட்ரிக் டன் யூரியா கோரிய நிலையில் 90 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தட்டுப்பாடுகளை போக்குவது கடினம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க:

மு.க ஸ்டாலின் தொடங்கிய அதிரடி திட்டம்- வீடு தேடி கல்வி

SBI Kisan Credit Card: குறைந்த வட்டியில் ரூ. 3- 4 லட்சம் கடன்களைப் பெறலாம்!

English Summary: Stalin's gift to farmers again!
Published on: 27 October 2021, 11:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now