News

Wednesday, 13 November 2019 11:11 AM

தமிழக விவசாயிகள் உரங்களின் விலையை கட்டுப்படுத்தவும், இருப்பு விவரங்களை வெளியிடவும் கடந்த வாரம் கோரிக்கை விடுத்திருந்தனர். யூரியா உள்ளிட்ட, பல்வேறு வகையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகள் மூலமாக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மட்டுமே யூரியாவை விற்பனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் நடவு பணி நடைபெற்று வருகிறது. நெல்பயிர் வளர்ச்சிக்கு அடி மற்றும்  மேல் உரமாக பெருமளவில் யூரியா பயன்படுத்துவது  வழக்கம். இதனால் யூரியாவின் தேவை அதிரித்துள்ளது. இதனால் உர விற்பனையாளர்கள் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது வேறு உரங்கள் சேர்த்து வாங்கினால் மட்டுமே யூரியா வழங்கப்படும் எனவும் புகார்கள் எழுந்துள்ளது. மேலும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 5 கடைகளின் உரிமம் ரத்து செய்யப் பட்டுள்ளது.

விவசாயிகளுக்கான  அறிவுப்பு

யூரியா 45 கிலோ மூட்டை ஒன்றுக்கு அரசு ரூ.266.50 மட்டுமே விலை நிர்ணயித்துள்ளது. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் உரங்கள் வாங்கும் போது தங்களுடைய ஆதார் எண்ணை உரக்கடையில் கொடுத்து மின்னணு இயந்திரத்தின் (Point Of Sale, POS) மூலம் உரிய ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ளனர். 

உரங்கள் வாங்கும் போது ஏதேனும் புகார்கள் இருந்தால் திருச்சி மாவட்ட  விவசாயிகள், வேளாண் இணை இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டு அறை (0431-24200554) தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம் என்றும்,  அதிக விலைக்கு யூரியா உரம் விற்பனை செய்வது தெரியவந்தால் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)