மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 May, 2022 3:20 PM IST
State Bank: 2nd time increased the interest rate! Details inside!

நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன்களுக்கான அடிப்படை வட்டியை மறுபடியும் 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த மாற்றம், விவசாய கடன் வாங்குபவர்களுக்கும் பொருந்துமா? இல்லையா? என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இம்மாத தொடங்கத்தில் வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்ததை அடுத்து, வங்கிகள் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் கடனுக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில் மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் முதல் 4.40 சதவீதம் வரை உயர்த்தியது. இதனையடுத்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (State Bank Of India) வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை இரண்டாவது முறையாக உயர்த்தியிருப்பது குறிப்பிடதக்கது.

எம்சிஎல்ஆர் (MCLR) அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியிருந்தது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் 0.1% ஆக உயர்த்தி இருக்கிறது. அதன்படி கடந்த ஓர் ஆண்டிற்கான எம்சிஎல்ஆர்(MCLR)  வட்டி விகிதம் 7.20% ஆக அதிகரித்திருப்பது குறிப்பிடதக்கது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.

இந்த அதிகரிப்பு மூலம், MCLR (Marginal Cost of Funds Based Lending Rate) இல் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மாத தவணை மற்றும் வட்டி விகிதம் அதிகரிக்கும். எஸ்பிஐ வங்கியின் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதத்தை (ஈபிஎல்ஆர்- EPLR) 6.65 சதவீதமாகவும், ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை (ஆர்எல்எல்ஆர்- RLLR) 6.25 சதவீதமாகவும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டது.

வீட்டுவசதி மற்றும் வாகன கடன்கள் உட்பட எந்த வகையான கடனையும் வழங்கும் போது வங்கிகள் EBLR மற்றும் RLLR ஐ விட கிரெடிட் ரிஸ்க் பிரீமியத்தை (CRP) சேர்க்கின்றன என்பது அறிந்திட வேண்டிய விஷயமாகும். எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, திருத்தப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் மே 15 முதல் அமலுக்கு வந்து, செயல்முறையில் உள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் முந்தைய 7.10 சதவீதத்தில் இருந்து 7.20 சதவீதமாக அதிகரித்திருப்பது குறிப்பிடதக்கது.

எஸ்பிஐ வங்கியில் திருத்தப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் மே 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. அதாவது, எம்சிஎல்ஆர்-இன் விகிதம் 7.10 சதவீதத்திலிருந்து 7.20 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. ஒரு மாதம் மற்றும் மூன்று மாத எம்சிஎல்ஆர் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.85 சதவீதமாகவும், ஆறு மாத எம்சிஎல்ஆர் விகிதம் 7.15 சதவீதமாகவும் அதிகரித்திருக்கிறது. மேலும், இரண்டு ஆண்டு எம்சிஎல்ஆர் விகிதம் 0.1 சதவீதம் அதிகரித்து 7.40 சதவீதமாகவும், மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் விகிதம் 7.50 சதவீதமாகவும் உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது.

அதே நேரத்தில், இரண்டு ஆண்டு எம்சிஎல்ஆர் 0.1 சதவீதம் அதிகரித்து 7.40 சதவீதமாகவும், மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் 7.50 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித திருத்தத்தைத் தொடர்ந்து, பல வங்கிகள் ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன, மேலும் சில வங்கிகள் வரும் நாட்களில் வட்டி விகிதத்தை மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறதும் குறிப்பிடதக்கது. இந்த வட்டி விகிதம் விவசாய கடன்களுக்கு பொருந்துமா? பொருந்தாத என்பதை வங்கிகளிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க:

தமிழகம்: 17 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! வானிலை நிலவரம்

தமிழகம்: தக்காளி மீண்டும் ரூ. 100க்கு விற்பனை! காய்கறி விலை

English Summary: State Bank: 2nd time increased the interest rate! Details inside!
Published on: 19 May 2022, 03:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now