வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முனைவர். உ.சிவகுமார், முனைவர் ப.முரளி அர்த்தனாரி ஆகியோருக்கு தமிழக அரசின் மாநில அறிவியலாளர் விருது வழங்கப்பட்டது.
மாநில அரசின் விருது (State Government Award)
தமிழ்நாடு முதுநிலை மற்றும் இளம் அறிவியலாளர்கள் விருது சென்னையில் உள்ள அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் ராஜேஷ் லக்கானியால் வழங்கப்பட்டது. இவ்விருதுடன் தலா ரூ.20,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
வேளாண் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் முனைவர் உ.சிவகுமார், பயிர் மற்றும் நுண்ணுயிர்களுக்கு இடையேயான தொடர்பு பற்றிய தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை பெற்றதற்காகவும் மற்றும் 5க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்ததற்காகவும், தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது வழங்கப்பட்டது.
இணை பேராசிரியர் (Associate Professor)
மேலும் இவர் அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழகம், ஜப்பானில் உள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பகுதி நேர இணைப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் கூட்டு ஆராய்ச்சிக்காக பிரிட்டன் நெதர்லாந்தில் உள்ள வார்வின் பல்கலைக்கழகம், தைவானில் உள்ள ஆராய்ச்சி நிலையம் ஸ்ரீலங்காவில் உள்ள ஜாஃப்னா பல்கலைக்கத்திற்கு சென்று வந்துள்ளார்.
ஆராய்ச்சி நிதி (Research Fund)
மேலும் பல்வேறு ஆராய்ச்சித் திட்டத்திற்காக ரூ.906 இலட்சத்தை பல்வேறு வேளாண் ஆராய்ச்சிக்கு உதவி செய்யும் நிறுவனங்களிடமிருந்து சிவகுமார் நிதி பெற்றுள்ளார்.
உழவியல் துறை இணைப்பேராசிரியரும், முதன்மை விஞ்ஞானியும், அகில இந்திய ஒருங்கிணைந்த களை ஆராயச்சித்திட்டம் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரியுமான, முனைவர். ப.முரளி அர்த்தனாரிக்கு, தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது மற்றும் ரூ.20,000க்கான காசோலை வழங்கப்பட்டது.
களை மேலாண்மை தொழில்நுட்பம் (Weed management technology)
இவ்விருதானது பயிர்களில் களை மேலாண்மை தொழில் நுட்பங்களை சிறந்த வகையில் உருவாக்கியதற்காகவும்,55க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட தற்காகவும் வழங்கப்பட்டது. இவர் நெல், மக்காச்சோளம் சூரியகாந்தி மற்றும் பருத்தியில் ஒருங்கிணைந்த களைமேலாண்மை தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளார்
சீனா செக் குடியரசு, வியட்னாம், மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற பன்னாட்டு களை அறிவியல் கருத்தரங்கில் முரளி தனது களை மேலாண்மை ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். மேலும் இவர் களை மேலாண்மை பற்றிய ஆராய்ச்சிக்காக ரூ.150 இலட்சத்திற்கும் அதிகமான நிதியுதவியை அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெற்று ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ளார்
வழிகாட்டி (Guide)
8 முதுநிலை ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் 10க்கும் மேற்பட்ட முனைவர் மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆராய்ச்சி வழிகாட்டுக் குழுவில் உறுப்பினராகவும் முரளி அர்த்தனாரி இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
பால் விற்று ஹெலிகாப்டர் வாங்கிய விவசாயி!