கலிபோர்னியா மாகாண கவர்னர் கவின் நியூசோம் (Gavin Newsom), தற்போது (Monkey Pox) குரங்கு காய்ச்சலால் பாதிப்பு அதிகரிப்பதால் திங்கள்கிழமை மாநிலத்தில் அவசர நிலையை அறிவித்தார்.
வைரஸுக்கு எதிர்க்கும் வகையில் தடுப்பூசி, எச்சரிக்கை மற்றும் வெளிச்செல்லும் முயற்சிகளை, மாநில சுகாதாரத் துறை அதிகரிக்க உதவுவதற்காக, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக, நியூசோம் (Newsom), அவரது அறிக்கையில் தெரிவித்தார்.
"கலிஃபோர்னியா, குரங்கு காய்ச்சலின் பரவலை குறைக்க, கலிபோர்னியா அரசு அனைத்து மட்டங்களிலும் அவசரமாக செயல்பட்டு வருகிறது. தொற்றுநோய் பரவலின் போது வலுப்படுத்தப்பட்ட, எங்கள் வலுவான சோதனை, தொடர்புத் தடமறிதல் மற்றும் சமூக கூட்டாண்மைகளை மேம்படுத்துவதன் மூலம், தடுப்பூசிகள், சிகிச்சைகள் மற்றும் அவுட்ரீச் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துகிறோம், என நியூசோம் கூறினார்.
"மேலும் தடுப்பூசிகளைப் கண்டுபிடிக்கவும், ஆபத்தைக் குறைப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், மற்றும் எதிர்த்துப் போராடும் LGBTQ சமூகத்துடன் நிற்பதற்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்." என்றார்.
கலிபோர்னியாவில் குரங்கு காய்ச்சலின் முதல் பாதிப்பு மே 25 அன்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் 5,811 பாதிப்புகளுடன் இருக்கும்போது இம்மாநிலத்தில் மட்டும் மொத்த எண்ணிக்கை 825 ஆக உள்ளது.
இதுவரை, கலிபோர்னியா 25,000 டோஸ் குரங்கு பாக்ஸ் தடுப்பூசியை வழங்கியுள்ளது, மேலும் சுமார் 61,000 டோஸ்களைப் பெற்றுள்ளது என்று நியூசோம் கூறினார்.
மேலும் படிக்க:
CUET PG 2022 தேதிகள் அறிவிப்பு, செப்டம்பரில் நடைபெறும்| விவரம் இதோ!
IRCTC ரயில்களில் இதற்கு தடை.. இதனால் விலையில் மாற்றம் ஏற்படுமா?