சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 9 April, 2019 7:45 PM IST

"ஸ்டேட் ஆப் குளோபல் ஏர்" என்ற சுகாதார தாக்கங்களை ஆய்வு செய்யும் நிறுவனம்  இந்த ஆண்டுக்கான  ஆய்வு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. காற்று மாசினால் மனிதனின் ஆயுட்காலம் வெகுவாக குறைகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். மனிதனின் ஆயுட்காலத்தை பாதிக்கும் நோய்களின் பட்டியலில் இப்போது காற்று மாசு என்பதும் ஒன்றாகிவிட்டது. உடல் பருமன், இரத்த கொதிப்பு, நீரிழிவு, புற்று நோய், மலேரியா போன்ற நோய்களை போல காற்று மாசும் ஒரு கொடிய நோயாகும்.

சுத்தமற்ற காற்றை சுவாசிப்பதால்  இதய நோய், சுவாச கோளாறுகள், நாள்பட்ட சுவாச நோய்கள் மற்றும் புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது. தற்போதைய ஆய்வில் டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளன என் கண்டுபிடிக்க பட்டுள்ளன.

ஆயுட்காலம்

 2017ஆம் ஆண்டு அறிக்கையின் படி சீனாவில் மட்டும் காற்று மாசுப்பாட்டால் 8,52,000 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிலும் இதே நிலை தான். மேலும் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக, இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் சராசரி ஆயுட்காலம் 18 - 20 மாதங்கள் குறையும். இதுவே தெற்கு ஆசிய நாடுகளில் 30 மாதங்கள் குறையும், என்று  ஹெல்த் எபக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (எச்இஐ) துணைத் தலைவர் ராபர்ட் ஓ கீப் கூறினார்.

திட எரிபொருட்களை சமைக்க அல்லது குளிர்காலங்களில் வெப்பமாக்க போன்ற காரணங்களால் காற்று மாசு படுகிறது. இதனை  சுவாசிப்பதால் முன்கூட்டியே உயிரிழக்க நேரிடுகிறது. மக்கள் காற்று மாசினை கட்டுப்படுத்தி அடுத்த தலைமுறையினருக்கு தூய்மையான காற்றினை கொடுக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.

English Summary: state of global air report
Published on: 09 April 2019, 07:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now