News

Monday, 01 July 2019 02:29 PM

தமிழ் மறவன் பட்டாம் பூச்சியினை தமிழக அரசு சின்னமாக தேர்ந்தெடுத்து அரசாணையை வெளியிட்டது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் வசிக்கும் எண்ணற்ற பட்டாம் பூச்சிகளில்  தமிழ் மறவன் ஒரு இனமாகும், இதற்கு போர் வீரன் என்ற மற்றொரு பொருள் உண்டு.

தமிழக அரசுக்கென்று பல்வேறு சின்னங்கள் உள்ளன. ஒவ்வொரு சின்னமும் தமிழனின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வாழ்வியலோடு தொடர்புடையது என்றால் அது மிகையாது. நமது அரசு முத்திரைகளில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா, வரையாடு, செங்காந்தள் மலர், பலாப்பழம், பரதநாட்டியம், கபடி உள்ளிட்டவை தமிழக அரசின் சின்னங்களாக அறிவிக்க பட்டுள்ளன. அந்த வரிசையில் தமிழ் மறவன் பட்டாம் பூச்சி இடம் பெற்றுள்ளது.

தமிழ் மறவன்

மேற்கு தொடர்ச்சி மலையில்  30-க்கும் அதிகமான  பட்டாம் பூச்சி இனங்கள் வசிக்கின்றன. இதில்   ‘தமிழ் மறவன்’ என்ற பட்டாம் பூச்சி இனமும் ஒன்று. இந்த பட்டாம்பூச்சிகள் அடிப்படையில்  கூட்டமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு  இடம் பெயரும் தன்மை கொண்டவை. இந்த பட்டாம்பூச்சிகள் பெரும்பாலும் மஞ்சள் மற்றும் அடர்த்தியான பழுப்பு வண்ணங்களில் காணப்படும். இதன் அறிவியல் பெயர் சிர்ரோசோர்ரா தையஸ் ஆகும்.

வனத்துறை பரிந்துரை

முதன்மை வனப் பாதுகாவலர் மற்றும்  தலைமை வன உயிரின பாதுகாவலற்களின் பரிந்துரைக்கு  இணங்க ‘தமிழ் மறவன்’ பட்டாம்பூச்சியினை தமிழக  அரசின் சின்னமாக அறிவித்து  அரசாணையை வெளியிட்டது.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)