நிகழ்காலத்தில் பொதுமக்களுக்கு மிகப்பெரும் தலைவலியாக இருப்பது இரண்டின் விலை தான். அவை, பெட்ரோல் விலையும், சிலிண்டர் விலையும். சிலிண்டர் விலை மாதம் ஒரு முறை ஏறினால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையோ எப்போது அதிகரிக்கிறது என்று சொல்லவே முடிவதில்லை. இந்நிலையில், மின்சார வாகனங்களின் தயாரிப்பும், விற்பனையும் கணிசமாக உயர்ந்து கொண்டே வருவதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் தொடர்பு இருக்குமோ? என்பது தான் சாமானிய மனிதனின் விடையறியா கேள்வியாக உள்ளது.
பெட்ரோல் & டீசல் வரி (Tax for Petrol & Diesel)
தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படவில்லை என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். இதுபோல், மாநில அரசுகள் மீது பிரதமர் மோடி குற்றம் சாட்டுவது இதுவே முதல் முறையாகும்.
அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பேசியுள்ளார். அதில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது மத்திய அரசு. ஆனால், தமிழகம், தெலுங்கானா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை இன்னும் குறைக்கவில்லை. இங்கு, வரி மிகவும் அதிகமாக உள்ளது. இது, அங்கு வாழும் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதியான செயலாகும். அதிக வரியால், அம்மாநில மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேசிய நலன் கருதி, வரியை குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடி (PM Modi)
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தினம் நிர்ணயம் செய்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒன்றிய அரசு தனது பங்கிற்குக் கலால் வரியும், மாநில அரசு மதிப்புக் கூட்டு வரியும் விதித்து வருகிறது. இதன் படி ஒரு லிட்டர் விலை 100 ரூபாய் என்றால் பெட்ரோலுக்கு 58 சதவீதமும், டீசலுக்கு 52 சதவீதமும் வரியாக செலுத்த வேண்டியுள்ளது. மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியை, குறைக்க வேண்டும் என்று தான் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மேலும் படிக்க