News

Monday, 10 June 2019 03:29 PM

நீர் சேமிப்பின் அவசியம்

நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக குறைத்து வருகிறது. உலகிலேயே அதிகஅளவில் நிலத்தடி நீரினை பயன் படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. எனவே இன்று நாடு முழுவதும் தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது.

பெரும்பாலான விவசாய நிலங்கள் போதிய தண்ணீர் இன்றி தரிசி நிலமாக  மாறி வருகிறது. உடனடி தீர்வாக நீர் நிலைகளை தூர் வார வேண்டும். நம் நாட்டில் இருந்த எண்ணற்ற நீர்நிலைகள் கால போக்கிலே மறைந்து கொண்டு வருகிறது.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். முதலில் மழை நீர் சேகரிப்பு தொட்டி எல்லா வீடுகளில் அமைத்தல் கட்டாயமாக்க பட வேண்டும். எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு அனைவரும் மழை நீர் சேகரிப்பினை முறை படுத்த வேண்டும்

நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கான ஏற்ற மரங்களை நட வேண்டும். தற்போதும் விழித்துக் கொள்ளாவிட்டால் வருங்காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்திற்கு சென்று விடும் என ஐயக்கிய நாடுகளின் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மழை நீர் சேமிப்பு தொட்டி

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்ககே மழை பெய்து வருகிறது. நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்த வேண்டு மெனில் உடனடியாக  மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை கட்டடங்களில் உருவாக்க வேண்டும்.

கட்டடிடத்தின் மொட்டை மாடியில் இருந்து மழை நீரை தரைப் பகுதிக்கு கொண்டு செல்ல மழை நீர் வடி குழாயினை அமைக்க வேண்டும். வடி குழாய்க்கு அல்லது கட்டடங்களின் அருகில் தரை பகுதியில் 1 மீட்டர் நீளம், 1 மீட்டர் அகலம் மற்றும் 1.5 மீட்டர் ஆழத்திற்கு கசிவு நீர் குழி ஒன்றை செங்கல் கொண்டு கட்ட வேண்டும்.

அதன் பின் குழியை கூழாங்கற்கள் அல்லது கருங்கல் ஜல்லியைக் கொண்டு 1 மீட்டர் ஆழத்திற்கு நிரப்ப வேண்டும். வீட்டின் மேற்பகுதியிலிருந்து  வெளி வரும் மழைநீரை வடிகுழாய் மூலம் கசிவு நீர் குழியின் மேற்பரப்பில் விழுமாறு செய்ய வேண்டும். இதுபோன்று முறையாக கசிவு நீர்குழி அமைத்தால் மொட்டை மாடியில் விழும் மழை நீரை நேரடியாக பூமிக்குள் ஊறச் செய்யலாம். கசிவு நீர் குழியை சிமெண்ட் மூடி கொண்டு மூட வேண்டும்.

கட்டடம் அமைந்துள்ள பகுதியினை சுற்றியும்,  மண் பரப்பாக இருந்தால் மழை நீர் எளிதில் நிலத்தை அடையும். களிமண் பகுதியாக இருந்தால் உரிய முறையில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதுவரை மழை நீர் கட்டமைப்புகள் அமைக்கப்படாமல் இருந்தால் தாமதமின்றி உடனடியாக கட்டமைப்புகளை உருவாக்கி மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது அனைவரின் கடமை ஆகும்.

Anitha Jegadeesan

Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)