STIHL நிறுவனத்தின் பவர் டில்லர் விவசாயத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறது. அதன் நவீன வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனானது பயன்பாட்டினை எளிமைப்படுத்துவதோடு மேம்பட்ட உற்பத்தித்திறனை வழங்குகிறது.
"நல்ல தொடக்கங்கள் நல்ல முடிவுகளுக்கு வழிவகுக்கும்" என்கிற பழமொழி விவசாயத்திற்கும் பொருந்தும். உண்மையில், விளைநிலத்தினை உழுவதற்கு பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக நவீன விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகள் கடுமையான உடல் வலியிலிருந்து விடுபடுவதோடு, மன அழுத்தமின்றியும் வேலை செய்ய இயலுவதாக விவசாயிகள் தங்களது அனுபவத்திலிருந்து குறிப்பிடுகின்றனர்.
பவர் டில்லரின் பயன்:
வயல்களை உழுவதற்குப் பயன்படுத்தப்படும் நவீன விவசாய இயந்திரங்களில் ஒன்று பவர் டில்லர் ஆகும். இந்த இயந்திரத்தின் உதவியுடன், விவசாயிகள் விளைநிலங்களை எளிதாகவும் முறையாகவும் உழலாம்.
நீங்கள் விவசாயத்திற்காக வலுவான மற்றும் நீடித்த பவர் டில்லரை வாங்க திட்டமிட்டால், STIHL இந்தியாவின் MH 710 மற்றும் MH 610 பவர் டில்லர்களை நீங்கள் தேர்வு செய்யலாம். STIHL இந்தியாவின் இந்த நவீன பவர் டில்லர் இயந்திரங்கள் விவசாயிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. மலிவு விலையில் கிடைப்பதோடு மட்டுமின்றி, பயன்படுத்த வசதியாகவும், எளிமையாகவும் உள்ளது. மேற்குறிப்பிட்ட இயந்திரங்களைப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கு காணலாம்-
STIHL MH 610 பவர் டில்லரின் சிறப்பம்சங்கள்:
STIHL இந்தியாவின் MH 610 பவர் டில்லர் இயந்திரம் பெட்ரோல் எஞ்சினை கொண்டு இயங்குகிறது. எஞ்சினின் தன்மை 6 HP ஆற்றலை உருவாக்கும் வகையில் air-cooled மற்றும் 4-ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டரை கொண்டுள்ளது.
எரிபொருள் கொள்ளளவு 3.6 லிட்டர். ஒருமுறை எரிபொருளை நிரப்பினால் நீண்ட காலம் பயன்படுத்த இயலும். STIHL MH 610 பவர் டில்லரின் மொத்த எடை 60 கிலோகிராம். இந்த இயந்திரத்தின் மூலம் விவசாயிகள் ஒரே நேரத்தில் 78 சென்டிமீட்டர் அகலம் மற்றும் 5 அங்குலம் ஆழம் வரை மண்ணை அள்ளலாம். கியர்பாக்ஸினை பொறுத்தவரை 2 முன்னோக்கி கியர் (forward gears) மற்றும் 1 ரிவர்ஸ் கியர் உள்ளது. இந்த பவர் டில்லரானது, உடல் வலியை குறைக்கும் வகையில் பணிச்சூழலியலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற தோட்டக்கலை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அதிக சக்தியுடன் பயன்படுத்த உதவுகிறது.
STIHL MH 710 பவர் டில்லரின் சிறப்பம்சங்கள்:
STIHL இந்தியாவின் MH 710 பவர் டில்லர் இயந்திரமும் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.
இது 7 HP ஆற்றலை உருவாக்கும் ஒற்றை சிலிண்டர் 4-ஸ்ட்ரோக், ஏர்-கூல்டு இன்ஜின் கட்டமைப்பை கொண்டுள்ளது. MH 610 போலவே, இதுவும் 3.6 லிட்டர் எரிபொருள் கொள்ளளவு கொண்டது. STIHL MH 710 பவர் டில்லரின் மொத்த எடை 101 கிலோ கிராம் ஆகும். இந்த இயந்திரத்தின் மூலம் விவசாயிகள் ஒரே நேரத்தில் 97 சென்டிமீட்டர் அகலம் மற்றும் 6 அங்குல ஆழம் வரை மண்ணை அள்ளலாம். கியர்பாக்ஸினை பொறுத்தவரை 2 முன்னோக்கி கியர் (forward gears) மற்றும் 1 ரிவர்ஸ் கியர் உள்ளது. இந்த பவர் டில்லரும், உடல் வலியை குறைக்கும் வகையில் பணிச்சூழலியலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மற்ற தோட்டக்கலை இயந்திரங்கள் மற்றும் கருவிகளை அதிக சக்தியுடன் பயன்படுத்த உதவுகிறது.
விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் STIHL பவர் டில்லர்:
தற்போது, நம் நாட்டு விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், விவசாய கூலிவேலைக்கு ஆட்கள் கிடைப்பதுதான். இது விவசாயிகளுக்கு கடுமையான உடல் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதனால் விவசாய பணிகள் தாமதமாக முடிவடைகிறது மற்றும் இறுதியில் உற்பத்தியின் அளவும் குறைகிறது.
இருப்பினும், STIHL பவர் டில்லர் இயந்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், விவசாயிகள் எதிர்கொள்ளும் இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க முடியும்.
Read also: மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்?
STIHL பவர் டில்லர் மிகவும் சிக்கலான மற்றும் சவாலான விவசாயப் பணிகளைக் கூட எளிதாகக் கையாள்கிறது. மேலும், MH 610 மற்றும் MH 710 ஆகிய இரண்டு மாடல்களும் பயனரின் உயரத்திற்கு ஏற்ப சரிசெய்யக்கூடிய கிரிப் ஹேண்டில்பாரைக் கொண்டுள்ளது. இந்த பவர் டில்லர்கள் செயல்பாட்டின் போது குறைந்தபட்ச அதிர்வுகளை உருவாக்குகின்றன, இதனால் விவசாயிகள் நீண்ட நேரம் வேலை செய்ய வசதியாக இருக்கும். இந்த பவர் டில்லர் இயந்திரங்களின் உதவியுடன், விவசாயிகள் விளைநிலம் மற்றும் தோட்டம் ஆகிய இரண்டிற்கும் தொடர்பான பணிகளை எளிதாக செய்ய முடியும்.
STIHL பவர் டில்லர் மூலம் உழவு, வறண்ட நிலத்தில் சாகுபடி செய்தல் மற்றும் நிலத்தை சமன் செய்தல் போன்ற பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இது விவசாயத்தில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
Read more:
யூடியூப் பார்த்து டிராகன் பழ சாகுபடியில் இறங்கி சாதித்த அசாம் விவசாயி!
Rabbit Farming: முயல் ஒருநாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்குமா?