பருவ காலத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதைகள் வேளாண் உதவி மைங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் மானிய விலையில் விவசாயிகளுக்கு நெல்விதைகள் வழங்குவதற்காக கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தற்போது, இதை பெற விவசாயிகள் ஆதார், கைபேசி, சர்வே எண் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா பருவத்துக்கு தேவையான நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல் ரகங்களான ஆர்.என்.ஆர். 15048 ஆதார விதைகள் மற்றும் சான்று விதைகள் 3,140 கிலோவும், டி.கே.எம். 13 ஆதார விதைகள் 2,945 கிலோவும் இருப்பு உள்ளது.
இந்த நெல் விதைகள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்களின் ஆதார், கைப்பேசி, சர்வே எண் ஆகிய ஆவணங்களை வழங்கி மானிய விலையில் நெல் விதைகளை வாங்கி பயன் பெறலாம் என்று மோகனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமாலா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: