News

Saturday, 02 January 2021 07:56 PM , by: KJ Staff

Credit : Dinamalar

நிவர் மற்றும் புரெவி புயலால் தமிழகத்தில் விவசாய நிலங்களில் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தது. பயிர் சேதங்கள் (crop damage) அரசு சார்பில் கணக்கெடுக்கப்பட்டு, விவசாயிகளுக்கு புயல் நிவாரணம் (Relief) வழங்க, 600 கோடி ரூபாயை வழங்கும்படி, மத்திய குழுவிடம், வேளாண் துறையினர் கேட்டுள்ளனர்.

பருவம் தவறி பெய்த கனமழையால், அறுவடைக்குத் தயாரான 10,000 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்தது! விவசாயிகள் வேதனை

புயலால் பயிர் பாதிப்பு:

மாநிலம் முழுதும், நெல் உள்ளிட்ட தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடியில் (Cultivation), விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். காய்கறிகள், கீரைகள், மூலிகைகள், வாசனை பொருட்கள், பழவகைகள் உள்ளிட்ட தோட்டக்கலை சாகுபடியும் (Horticulture Cultivation) நடந்து வருகிறது. இந்நிலையில், டிசம்பரில் உருவான, 'நிவர்' புயலால் (Nivar Cyclone), கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், 40 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் பாதிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து உருவான, 'புரெவி' புயலால் (Burevi Cyclone) பெய்த கனமழையாலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமேஸ்வரம் உள்பட, 15 மாவட்டங்களில், 6 லட்சம் ஏக்கருக்கு மேலான பயிர்கள் பாதிக்கப்பட்டன.

மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி! கள பயிற்சியில் மாணவர்கள்!

600 கோடி ரூபாய் நிவாரணம்:

தமிழகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களை, மத்திய குழுவினர் (Central Committee) இரண்டு கட்டங்களாக ஆய்வு செய்து சென்றனர். விரைவில், மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. அறிக்கையை ஆய்வு செய்து, தமிழகத்திற்கு புயல் நிவாரணத்தை மத்திய அரசு அறிவிக்க உள்ளது. பயிர் சேதங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 600 கோடி ரூபாயை வேளாண் துறையினர் கேட்டுள்ளனர். இதில், வேளாண் பயிர்களுக்கு, 500 கோடி ரூபாயும், தோட்டக்கலை பயிர்களுக்கு (Horticulture Crops) 100 கோடி ரூபாயும் அடக்கம். மத்திய அரசு நிதி ஒதுக்கியதும், விவசாயிகளுக்கு உடனுக்குடன் நிவாரணம் வழங்க, வேளாண் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தேனீ வளர்ப்பில் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது நவீன ரோபோ!

முளைக்கும் நிலக்கடலையை சரியாகப் பிரித்து மகசூலை அதிகரிப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)